நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!

Sani Peyarchi 2023: இந்த மாதம் 17 ஆம் தேதி நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் உருவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2023, 03:34 PM IST
  • கடகம் மற்றும் விர்ச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீரென்று சிக்கல்கள் அதிகரிக்கும்.
  • பணம் சம்பந்தமான விஷயங்களில் தொடர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
  • திடீரென்று பல இடங்களிலிருந்து பிரச்சனை வரக்கூடும்.
நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!  title=

சனிப்பெயர்ச்சி பலன்கள்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். இவர் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிக்கும் முன்னும் பின்னும் இருக்கும் ராசிகளிலும் இவரது தாக்கம் இருக்கும். இதைத் தவிர இன்னும் இரு ராசிகளிலும் சனி தசையின் தாக்கம் இருக்கும். இந்த வகையில், ஒரே நேரத்தில் 5 ராசிகளில் சனி பகவானின் தாக்கம் தெரியும். இந்த மாதம் 17 ஆம் தேதி நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் உருவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

2023-ல் சனி பகவானின் பெயர்ச்சி: 

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, அதாவது முதல் மாதமான ஜனவரி மாதத்திலேயே சனி தனது ராசியை மாற்றவுள்ளார். அவர் தற்போது தனது சொந்த ராசியான மகர ராசியில் உள்ளார். அவர் தனது ராசியை மாற்றி ஜனவரி 17ம் தேதி கும்ப ராசிக்குள் நுழைவார். இதுவும் சனியின் சொந்த ராசியாகும். அதாவது சனி தனது ராசியில் இருந்து வெளியேறி தனது மற்றொரு ராசிக்குள் நுழைவார். இந்த சனி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சனியின் ராசி மாற்றத்தால் கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தில் சனியின் தாக்கம் தொடங்கும். இதனால் இந்த மூன்று ராசிக்காரர்கள் 2023-ம் ஆண்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த 2 ராசிகளில் சனி தசை தொடங்கும்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையின் பாதிப்பு இருக்கும். ஜனவரி 17-ம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சியான உடனேயே, இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் சனி தசையின் தாக்கம் முடிந்து கடகம், விருச்சிகம் ஆகிய ரசிகளுக்கு இந்த தாக்கம் தொடங்கும். அதாவது, கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாட்கள் தொடங்கும். 

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியும் பத்ர ராஜயோகமும்! குபேரனின் செல்லப் பிள்ளைகளாகும் சில ராசிகள்! 

கடகம் மற்றும் விர்ச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீரென்று சிக்கல்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான விஷயங்களில் தொடர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீரென்று பல இடங்களிலிருந்து பிரச்சனை வரக்கூடும். 

இந்த ரசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும் 

ஜனவரி 17-ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். அதாவது இந்த ஆண்டு சனியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எந்த வேலை செய்தாலும் பலன் கிடைக்காது. விரும்பாவிட்டாலும் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரும். பல சமயங்களில் பண இழப்பை சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான விஷயங்கள் திடீரென்று முளைக்கும்.

இந்த 2 ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும்

2023-ம் ஆண்டு மகரம், கும்பம் ராசிக்காரர்களும் ஏழரை சனியின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். எனினும் அதிகப்படியான பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள். ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் மகர ராசியிலும், இரண்டாம் கட்டம் கும்ப ராசியிலும் இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியின் கடைசி கட்டமாக இருப்பதால், பாதங்கள் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். எனினும், விட்டு விலகும் தருவாயில் சனி சுப பலன்களை வழங்குவார். மறுபுறம், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனியின் கலவையான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Planet Transits: ஜனவரி மாதத்தில் எந்த கிரகப் பெயர்ச்சி மிகவும் மோசம்? சனி பெயர்ச்சி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News