ஏழரை நாட்டு சனியின் பிடியில் 3 ராசிகள்: கெடுபிடியான காலம், இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்
Astrology: தற்போது 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள்?
சனி பகவான்-தோஷங்களும் பரிகாரங்களும்: ஜோதிடத்தில், சனி பகவான் நீதிக்கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலங்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கும் ராசிக்காரர்களின் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், சனி பகவானை பிரீதி அடையச்செய்ய, இவர்கள் மாலை வேளைகளில் சிலவற்றை செய்யலாம். இந்த பரிகாரத்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அருள்வார் என்று நம்பப்படுகிறது.
தற்போது 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள்? சனியின் கோபத்தில் இருந்து விடுபட என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த 3 ராசிகளிலும் தற்போது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது
இந்த நேரத்தில் தனுசு, கும்பம், மகரம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இதில் தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் மூன்றாம் கட்டம் நடக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஜனவரியில் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். மறுபுறம், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டமும், மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாம் கட்டமும் நடக்கிறது. தனுசு ராசியிலிருந்து ஏழரை நாட்டு சனி நீங்கிய பின் மீன ராசிக்காரர்களுக்கு மகாதசை தொடங்கும்.
மேலும் படிக்க | அஸ்தமித்தது சுக்கிரன்: எந்த ராசிகளுக்கு பிரச்சனை? யாருக்கு ஆதாயம்? இதோ விவரம்
சனி பகவானை மகிழ்விக்கும் வழிகளை தெரிந்து கொள்வோம்:-
சனி பகவானுக்கான பரிகாரங்கள்
- சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.
- எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும்.
- சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.
- ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம்.
- சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும்.
- பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்படி சனி பகவானை மனமுருகி வேண்டிக்கொள்ளவும்.
- உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, உளுந்தை கோவிலில் உள்ள ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.
- உளுந்து தானம் செய்வது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்துக்கான ஒரு முக்கிய நிவாரணமாக கருதப்படுகின்றது.
- தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
- தொழுநோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களின் நலனுக்காக வேலை செய்வது போன்றவை சனிபகவானின் மஹாதசை பலன்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ