ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திற்கான பரிகாரங்கள்: ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். ஒருவர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்தால், அவரது கர்மாக்கள் நன்றாக இருந்தால், சனி பகவான் அவரது ஜாதகத்தில் அசுப ஸ்தானத்தில் இல்லாமல் இருந்தால், சனியின் கோபத்திலிருந்து அந்த நபர் தப்பித்துகொள்ளலாம். இல்லையெனில் சனி பகவான் பல வித இன்னல்களை கொடுப்பார். சனியின் மகாதசை என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் பயப்படுவதற்கு இதுவே காரணம்.
தற்போது 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது. ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. இந்த மூன்று கட்டங்களிலும், சனி பகவான் வெவ்வேறு வழிகளில் இன்னல்களை அளிக்கிறார். எந்தெந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள்? சனியின் கோபத்தில் இருந்து விடுபட என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் வேதனையானது:
ஏழரை நாட்டு சனியின் மூன்று கட்டங்களிலும், சனி வாழ்க்கையில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறார். இவற்றில் மூன்றாவது நிலை மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இதில் சனியின் கோபத்தை அதிகம் அனுபவிக்க வேண்டி இருக்கும். ஜோதிடத்தின்படி, சனியின் முதல் கட்டத்தில் நிதி நிலையிலும், இரண்டாம் கட்டத்தில் குடும்ப வாழ்க்கையிலும், மூன்றாம் கட்டத்தில் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
மேலும் படிக்க | கன்னி ராசியில் நுழையும் சுக்ரன்; அமோக வாழ்வைப் பெறும் ‘சில’ ராசிகள்!
இந்த 3 ராசிகளிலும் தற்போது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது
இந்த நேரத்தில் தனுசு, கும்பம், மகரம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இதில் தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் மூன்றாம் கட்டம் நடக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஜனவரியில் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். மறுபுறம், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டமும், மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாம் கட்டமும் நடக்கிறது. தனுசு ராசியிலிருந்து ஏழரை நாட்டு சனி நீங்கிய பின் மீன ராசிக்காரர்களுக்கு மகாதசை தொடங்கும்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பரிகாரங்கள்
சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பாத்திரத்தை எண்ணெயுடன் சனி பகவானின் கோவிலில் வைத்துவிட வேண்டும். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புரட்டாசி சனிக்கிழமை: விரதம் இருந்து வழிபட்டால் கேட்கும் வரத்தை கொடுப்பார் பெருமாள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ