Surya Shani Shadashtak Yog: ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் ஜோதிடத்தில் சூரிய கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கும் தனி முக்கியத்துவம் இருக்கிறது. சூரியன் ஆன்மாவின் காரகத்தாவாக கருதப்படுகிறார். அதேசமயம் சனி நீதி தேவராக கருதப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையே எப்போதுமே ஒரு பகை உணர்வு இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையின் காரணமாக, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 16 ஆம் தேதி சூரியன் சனி சேர்க்கை நடந்துள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் ஆபத்தான பலனைத் தரும், மேலும் தரித்திரமாக இருக்கும். அதுமட்டுமின்றி சூரியன்-சனியின் இந்த சேர்க்கையானது, சில ராசிகளின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே சூரியன் மற்றும் சனி ஷடாஷ்டக யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


கடகம் (Cancer Zodiac Sign): சூரிய பெயர்ச்சி கடக ராசியில் நடந்துள்ளது. இதனால் உருவாகி இருக்கும் ஷடாஷ்டக யோகம் கடக்க ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களைத் தரும். உடல்நலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதே சமயம் பழைய பிரச்சனைகளால் சிரமம் ஏற்படலாம். அவசர முடிவால் கஷ்டங்கள் வரலாம். சூரியன் மற்றும் சனியின் இந்த கலவையானது தொழிலில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பயணிப்பதால் பல தடைகள் உண்டாகலாம்.


மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!


சிம்மம் (Leo Zodiac Sign): சூரியன் சனி சேர்க்கையால் உருவாகியிருக்கும் ஷடாஷ்டக யோகம் நிதி சிக்கலை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். சந்தைகள் ஏற்படலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். அலுவலகத்தில் போட்டி நிலவும் சூழ்நிலை காணப்படும்.


கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் தாக்கத்தை காண்பார்கள். எதிரிகளால் தொல்லை ஏற்படும். உங்களுக்கு எதிராக சதி நடத்தலாம். பணியிட அரசியலில் இருந்து விலகி இருக்கவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும் இல்லையெனில் நிதி சிக்கலில் சிக்ககிக் கொள்ளலாம். அரசுத் துறையில் உள்ள சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.


தனுசு (Sagittarius Zodiac Sign): நேரம் ஏற்ற தாழ்வாக இருக்கலாம். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தன்னம்பிக்கை குறையலாம். எதிர்மறை எண்ணங்ககள் தோன்றும். குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உறவுகளில் கசப்பு அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணிகளில் தடைகளைச் சந்திக்க நேரிடும். 


கும்பம் (Aquarius Zodiac Sign): சூரியன் சனி சேர்க்கையால் உருவாகியிருக்கும் ஷடாஷ்டக யோகத்தால் வேலையில் வீண் பிரச்சனைகள் வரலாம். அறிவுரை இல்லாமல் எந்த வேலையையும் செய்ய வேண்டாம். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். மனம் சோகமாக இருக்கும். நிதி விஷயங்களிலும் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். பண ஆதாய வழியில் தடைகள் ஏற்படும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ