Hanuman: ராமருக்கு வைகுண்டம் செல்ல அனுமார் விடை கொடுத்த கதை! இது கணையாழி தந்திரம்!
Hanuman & Ram Mantra Worship : வைகுண்டத்திற்கு ராமருடன் செல்வதா, இல்லை ராம நாமத்துடன் பூமியிலேயே இருந்துவிடுவதா என்று ஆஞ்சநேயரை முடிவெடுக்க வைக்க ஸ்ரீராமர் செய்த உத்தி என்ன தெரியுமா?
ஸ்ரீராமரை எப்போதும் தனது நெஞ்சத்திலே வைத்திருக்கும் அனுமார், ராம நாமம் இருக்கும் இடத்தில் இருப்பார் என்பது இந்து மத நம்பிக்கை. அனுமாரைப் பற்றிய பல கதைகள் தெரிந்தாலும், பலருக்கும் தெரியாத சுவாரசியமான ஒரு கதை உண்டு. ஸ்ரீராமருடனே இருந்த ஆஞ்சநேயர், ஒரு தொண்டராக அவருக்கு பணிவிடைகள் செய்துக் கொண்டு அவரைப் பிரியாமல் இருக்கிறார்.
தன்னைப் பிரியும்போது அனுமான் மனம் வருந்தாமல் இருக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீ ராமர், அதற்காக செய்தி உத்தி தான் ராமருடன் செல்வதா, இல்லை ராம நாமத்துடன் பூமியிலேயே இருந்துவிடுவதா என்று ஆஞ்சநேயரை முடிவெடுக்க வைத்தது.
கணையாழி தந்திரம்
அனுமாருக்கு தனது மனதை ஒரு சம்பவத்தால் புரிய வைக்க நினைத்த ராமர், தனது விரலில் இருந்த மோதிரங்களில் ஒன்றை பள்ளத்தில் விழவைத்துவிட்டார். கீழே விழுந்த மோதிரத்தை எடுத்து வர அனுமாரை அனுப்பினார் ராமர். மோதிரத்தைத் துரத்திக் கொண்டே சென்ற அனுமார் இறுதியில் போய் நின்றது பாதாள லோகத்தின் வாசலில்... மூடிய வாசலின் வெளியே நின்ற போது, அங்கே வந்த காலன், அனுமார் வந்ததற்கான காரணத்தை கேட்கிறார்.
பாதாள உலகத்தில் ஸ்ரீராமரின் கணையாழி
பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே விழுந்துவிட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்று காலதேவனிடம் அனுமார் சொன்னதும், சரி மோதிரத்தை எடுத்துக் கொள் என்று சொல்லி கதவு திறந்துவிடப்பட்டது.
மேலும் படிக்க | Astro Traits: மிகவும் இளகிய மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள்
குழப்பத்தை தீர்த்து வைத்த காலதேவன்
ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து கிடந்தது, அவை அனைத்துமே ஒன்றுபோலவே இருந்ததால் அனுமாருக்கு திகைப்பு ஏற்பட்டது. அனுமாரின் குழப்பத்தை தீர்த்து வைத்த காலதேவன், இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.
அதேபோல, பிரம்மா விஷ்ணு லட்சுமி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுப்பார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றிய பின் மறைவார்கள். அவர்களை தடுக்கவும் முடியாது அவர்களுடன் செல்லவும் முடியாது, ராமருடன் எப்போதும் இருக்கும் நீ, அவருக்கு விடை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமரின் மோதிரம் கீழே விழ வைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
காலசுழற்சியின் உண்மை அறிந்த அனுமார்
ராமர் உணர்த்த நினைத்த உண்மையை உணர்ந்த அனுமனும் மனம் தெளிந்துவிட்டார். பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற நினைத்தாலும் அவரை விட மனதில் துணியாததால், வேண்டுமானால், நீயும் என்னுடனே வைகுண்டம் வந்துவிடு என்று வரம் கொடுத்தார். வரம் கொடுத்துவிட்டு ஆஞ்சநேயரை கட்டித் தழுவினார் ராமர்.
உடல் சிலிர்த்து உள்ளம் நெகிழ்ந்த அனுமார், ராமரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது தான் ராம நாமம் என்பதன் அடிப்படைத் தத்துவம். ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் ராமனாக இதே ரூபத்தில் இருப்பீர்களா? இல்லை விஷ்ணுவாக இருப்பீர்களா? என அனுமன் கேட்ட கேள்வியால் திகைத்தாலும் ஸ்ரீராமர் பதில் சொன்னார். வைகுண்டத்தில் நான் விஷ்ணுவாகவே இருப்பேன் என்று சொன்னதும், அனுமாரின் மனம் மாறிவிட்டது.
அனுமாரின் விண்ணப்பம்
நான் ஸ்ரீராமனின் பக்தன். உங்களை ராமனாகவே வணங்க விரும்புகிறேன். எனவே, பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன், உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் அருளினால் போதும் என்ற அனுமனின் ராம பக்தியை எண்ணி வியந்த ராமசந்திர மூர்த்தி, ராம நாமம் ஜெபிக்கும் இடத்தில் அனுமன் சூட்சும ரூபத்தில் இருப்பார் என்று வரம் அளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ