சனி வக்ர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனி மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். இது ஜூன் 5 முதல் பிற்போக்கு நகர்வில் உள்ளது. 141 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 23, 2022 வரை சனி பிற்போக்கு நிலையில் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படக்கூடும். 


குறிப்பாக, சனியின் வக்ர பெயர்ச்சி, அதாவது பிற்போக்கு நகர்வு காரணமாக, 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளில் சில நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டித் தேர்விலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 


மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம் 


கன்னி


திடீரென்று சில நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் கூடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்கப்படும். வெளிநாடு செல்லும் திட்டமும் உருவாகும். முதலீடு செய்ய இது நல்ல நேரம்.


சுபச்செலவுகளாக இருந்தாலும், இந்த காலத்தில் அதிக பண விரயம் இருக்கும். நிதி நெருக்கடி ஏற்படலாம். எனினும், இதனால் கன்னி ராசிக்காரர்கள் கவலைப்படத் தேவை இல்லை. ஏனென்றால், இப்போது ஏற்படும் செலவுகள் சுபச் செலவுகளாகவே இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டி இருந்தாலும், இவற்றால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்


மகரம்


இந்த காலத்தில் மகர ராசிக்காரர்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திரும்பப் பெறுவதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். 


மகர ராசிக்கரர்கள் முதலீடுகள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும், இழப்புகள் ஏற்படலாம். ஆகையால், நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகபட்ச கவம் தேவைப்படுகின்றது.


கும்பம்


திடீர் உடல்நலக் கோளாறுகள் வரலாம். மனதில் பதற்றம், அமைதியின்மை போன்றவையும் ஏற்படலாம். திடீர் செலவு அதிகரிப்பாலும் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் போட்டுவைத்த வரவுசெலவுத் திட்டத்தைத் தாண்டி செலவுகள் அதிகரிக்கலாம். இது முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


மீனம்


திடீர் செலவுகள் வரக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். வெளிநாடு செல்லும்போது விசா பிரச்சனைகளும் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். முடிந்தவரை கடல் பயணத்தைத் தவிர்க்கவும்.


மீன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நிதி நிலையில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. மிகுந்த சிக்கனத்துடன் செயல்பட்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம். செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR