விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சமீபத்தில், புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். புதனின் பெயர்ச்சியால் மகாவிபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு முன், 6 நவம்பர் 2023 அன்று புதன் பெயர்ச்சி நடந்தது. புதனின் இந்த பெயர்ச்சியால் உருவாகும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த விபரீத ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். இவர்களுக்கு எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும். இந்த ராசிக்கார்ரகள் இந்த காலத்தில் சொத்து, பங்குச் சந்தை, பந்தயம் அல்லது லாட்டரி மூலம் பயனடையலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பெயர்ச்சியால் உருவான விபரீத ராஜயோகம் காரணமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்


மேஷ ராசி (Aries): 


புதன் பெயர்ச்சியால் உருவாகும் இந்த விபரீத ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் உடன் இருந்து ஆதரவு கொடுக்கும். எதிர்பாராத இடங்கலிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல இணக்கம் ஏற்படும். நிதி ஆதாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் நற்பலன்கள், பண வரவு


மிதுன ராசி (Gemini): 


மிதுன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் சுப பலன்களைத் தரும். குறிப்பாக வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் நிதி நிலை மேம்படும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், அந்த ஆசை இப்போது நிறைவேறும். இந்த நேரத்தில் சில முக்கியமான திட்டங்களை தீட்டி அதில் வெற்றியும் காணலாம். ணியிடத்தில் உங்கள் எதிரிகளுக்கு கடும் போட்டியை கொடுக்க முடியும். முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். 


கடக ராசி (Cancer): 


கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் உருவான விபரீத ராஜயோகம் பல வழிகளில் பலன் தரும். உங்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணத்தை இப்போது பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் சில விலையுயர்ந்த அல்லது ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


மகர ராசி (Capricorn): 


புதன் பெயர்ச்சியின் காரணமாக விபரீத ராஜயோகம் உடுவாகியுள்ளதால், மகர ராசிக்காரர்கள் தங்களது பெரிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இப்போது வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்திலும் லாபம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வெற்றிகரமாக பல ஒப்பந்தங்களை செய்துமுடிப்பீர்கள். பல பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். உயர்ந்த பதவி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: ஜூன் 2024 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், ராஜவாழ்க்கை... முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ