வேலை, வியாபாரத்தில் வெற்றி: புதன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்
Budh Uday: செப்டம்பரில் புதன் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
புதன் உதயம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஒரு பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் அஸ்தமிக்கும் போது, அந்த அஸ்தமன நிலையில் கிரகங்கள் பலனளிக்காது என்று நம்பப்படுகிறது. மேலும் அவை உதயமாகும் போது, அவற்றின் செல்வாக்கு அதிகரிக்கிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி, புத்திசாலித்தனம், தர்க்கம், வணிகம் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் உதயமாக உள்ளது. இந்நாளில் அதிகாலை 4.28 மணிக்கு உதயம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதன் உச்சம் பெறுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும், ஆனால், 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இவர்கள் அனைத்து துறைகளிலும் நன்மைகளைப் பெறுவார்கள். புதனின் உதயத்தால் இவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். செப்டம்பரில் புதன் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இவர்களை வாட்டி வந்த பிரச்சனைகள் நீங்கும், தொல்லைகள் தீரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்கள் புதனின் உதயத்தால் ஆதாயம் அடைவார்கள்
மேஷ ராசி
ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் புதன் உதயமாகப் போகிறார். இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதன் உச்சம் பெறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கூடும். பணியிடத்தில் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதனின் உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத் துறையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்த நேரத்தில் நீதிமன்ற வழக்குகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் வருமானம் கூடும். பொருட்கள், பங்குச் சந்தை, தங்கம்-வெள்ளி மற்றும் சொத்து வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக நன்மை பயக்கும். லாபம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | இன்று முதல் ராஜவாழ்க்கை: வக்ரமடையும் குருவால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்
மிதுன ராசி
சிம்மத்தில் புதன் உச்சம் பெறுவதால், மிதுன ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். இவர்கள் தொழில் துறையில் முன்னேற்றம் அடைவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நேரத்தில் இந்த மக்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்க யோகம் உள்ளது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு விசேஷ பலன்களைத் தரும். மூதாதையர் சொத்துக்களும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சிம்ம ராசி
ஜோதிட சாஸ்திரப்படி புதன் உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த ராசியில்தான் புதன் உதயமாகிறது. இந்த நேரத்தில் மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். இந்த காலத்தில் இவர்களது ஆளுமை மேம்படும், நம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பெரிய பண ஆதாயம் இருக்கலாம், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ