செவ்வாய்ப் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அனைத்தும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒடு குறிப்பிட்ட காலங்களில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவை சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப பலன்களையும் கொண்டு வரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)


தைரியம், ஆற்றல், சொந்தம் மற்றும் நிலம் போன்றவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியானார். அப்படிப்பட்ட நிலையில் நவம்பர் 16-ம் தேதி வரை செவ்வாய் துலாம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இது பல வித நல்ல பலன்களை கொண்டு வரும். இந்த ராசிககரர்களுக்கு இக்காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


செவ்வாய் பெயர்ச்சியால் செம்மை அடையும் ராசிகள் இவைதான்


சிம்ம ராசி (Leo)


ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் துலாம் ராசிக்கு அக்டோபர் 3ம் தேதி பிரவேசித்துள்ளார். சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சி மிகவும் ஏற்றதாக இருக்கும். துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆனதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இப்போது செய்யபடும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும். அயல்நாட்டுத் தொழிலில் ஈடுபட்டால், இந்தக் காலத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். அதே சமயம் வெளிநாடு சென்று படிக்கும் எண்ணம் இருந்தால் இந்த நேரத்தில் அதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


மேலும் படிக்க | உச்சம் செல்லும் சனி - சுக்கிரன்.. தீபாவளி முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போக்கும் ராசிகள்


துலாம் ராசி (Libra)


அக்டோபர் 3 ஆம் தேதி செவ்வாய் கிரகம் துலாம் ராசிக்குள்தான் நுழைந்தது. இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 16-ம் தேதி வரையிலான காலம் மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. செவ்வாயின் ராசி மாற்றத்தால், துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல செய்திகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஆர்வத்துடன் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த காலம் காவல்துறை மற்றும் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பங்குதாரர்களுடனான உறவுகள் மேம்படும்.


தனுசு ராசி (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களும் செவ்வாய் பெயர்ச்சியின் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் 16ம் தேதி வரையிலான காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானத்தில் நிலையான அதிகரிப்பு இருக்கும். இந்த நேரத்தில், தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, உங்கள் நிதி நிலை மேம்பட்டு வலுவடையும். ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு இது சாதகமான காலமாக இடுக்கும். இப்போது நல்ல லாபம் கிடைக்கலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்வதால் மகத்தான லாபம் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைன்யுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்... வெற்றிகள் குவியும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ