புதன் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: ப்ரமோஷன், பண வரவுக்கு ரெடியா இருங்க
Mercury Transit: புதனின் இந்த அஸ்தமன நிலையால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
Mercury Transit: ஜோதிட கணக்கீடுகளை உற்று நோக்கினால் நம் முன்னோர்களின் திறன் மற்றும் கிரக ஆராய்ச்சிகளில் அவர்களுக்கு இருந்த நிபுணத்துவம் ஆகியவை நமக்கு புரியும். எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல வித துல்லிய வானியல் நிகழ்வுகளின் கணக்கீடு முன்னரே செய்யப்பட்டுள்ளது. ராசி மாற்றங்கள், அஸ்தமன, உதய நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களின் இயக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன.
கிரகங்கள் சூரியனின் அருகில் வரும்போது அவை அஸ்தமனமாகின்றன. பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை சுபமாக கருதப்படுவதில்லை. அஸ்தமன நிலையில் கிரகங்களின் சக்தி பலவீனமடைந்து அவை அசுப பலன்களைத் தரத் தொடங்குகின்றன என்பதே இதற்கு காரணமாகும்.
எனினும், அஸ்தமன நிலையிலும் கிரகங்கள் அனத்து ராசிகளுக்கும் அசுப விளைவுகளை அளிப்பதில்லை. இந்த நிலை சில ராசிகளுக்கு சுபமாகவும் அமையும். இன்று, வியாழக்கிழமை, 8 பிப்ரவரி 2024 அன்று, புதன் அஸ்தமனமாகவுள்ளார். மகர ராசியில் அஸ்தமிக்கும் புதன் காரணமாக அனைத்து ராசிக்காரர்களின் பணம், செல்வம், தொழில், பேச்சுத்திறன், புத்திசாலித்தனம் ஆகியவற்றில் தாக்கம் ஏற்படும். எனினும், புதனின் இந்த அஸ்தமன நிலையால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதன் அஸ்தமனத்தால நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள்
ரிஷபம் (Taurus):
புதனின் அஸ்தமனம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல விதமான சுப பலன்களை அளிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் சாதகமான பலன்களை பெறுவார்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளாது. தங்கள் புத்திசாலித்தனத்தால் நல்ல மரியாதையை பெறுவார்கள். உத்தியோகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
கடகம் (Cancer):
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் பல வித நன்மைகளைத் தரும். பழைய பிரச்சனைகளுக்கு இந்த காலத்தில் தீர்வு கிடைக்கும். புதனின் அருளால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். பணியிடம், தொழில், வியாபாரம் என அனைத்து இடங்களிலும் முன்னேற்றம் காணப்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இந்த காலத்தில் கடின உழிப்பு இருந்தால், வெற்றியின் உச்சம் தொடலாம்.
தனுசு (Sagittarius):
தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் பல வித நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். பணியிடத்தில் இருந்த சவால்களும் தொழிலில் இருந்த தொல்லைகளும் இப்போது குறையும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வித பாதைகள் திறக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கு இது சாதமகான நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024.. கோடி கோடியாக செல்வ யோகத்தை பெறப்போக்கும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ