குரு வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்திகளால்  சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதம் பல கிரகங்களில் மாற்றம் ஏற்படும். செப்டம்பர் 4 ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். குருவின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப விளைவுகளையும் அளிக்கும். குரு பகவான் டிசம்பர் 31 வரை வக்ர நிலையில் இருந்து அதன் பிறகு வக்ர பெயர்ச்சி அடைவார்ர. ஜோதிட சாஸ்திரத்தில், குரு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், பெருமை, செல்வம் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு சுபமாக இருந்தால், அந்த நபர் அனைத்து விதமான செல்வச்செழிப்புகளையும் பெறுகிறார். அவருக்கு பணத்திற்கு குறைவே இருப்பதில்லை. எடுத்த அனைத்து காரியங்களிலும் அவர் வெற்றியை காண்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்கள் குருவின் இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிப்பார்கள். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுநாள் வரை இவர்களை வாட்டி வதைத்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி ஓடும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷ ராசி


செப்டம்பர் 4 ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவது இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்கைத் துணையுடன் நல்ல நெருக்கம் ஏற்படும். நிதி ஆதாயத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 


கடக ராசி


குருவின் வக்ர பெயர்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த நேரம் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நிலம் அல்லது கட்டிடத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். குரு பகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமைகள் வலுவடையும்.


மேலும் படிக்க | சனியால் 2024 வரை செல்வ மழை, அதிர்ஷ்ட யோகம்.. இந்த ரசிகளுக்கு தீபாவளி களைகட்டும்


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர இயக்கம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. திருமணத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நிதி ஆதாயத்திற்காக செய்யும் திட்டங்கள் வெற்றி பெறும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். அதே நேரத்தில், காதல் வாழ்க்கையில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


சிம்ம ராசி


குருவின் வக்ர பெயர்ச்சியும் அதன் பிறகு நடக்கவுள்ள வக்ர இயக்கமும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமணமானவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே சமயம் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.


துலாம் ராசி


வக்ர நிலையில் குரு பயணிப்பது துலா ராசிக்காரர்களுக்கு சாதமகாக இருக்கும். இவர்களது வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் தீரும். திருமணத்திற்கு ஏற்ற துணையை தேடும் துலா ராசிக்காரர்களின் தேடல் முடிவடையும். நல்ல வாழ்க்கைத் துணையை பெறுவீர்கள். ஜோதிடத்தின்படி, நீதித்துறை விஷயங்களிலும் வெற்றி வாய்ப்புகள் உள்ளன. பலம் கூடும் மற்றும் பல துறைகளில் வெற்றி பெறலாம்.


மேலும் படிக்க | குருவால் குபேர கோடீஸ்வர யோகம்.. இன்று முதல் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்; முழு ராசிபலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ