12 ஆண்டுக்கு பிறகு அற்புத நிகழ்வு.. குருவால் இந்த ராசிகளுக்கு செல்வம் குவியும்

Jupiter Vakri In Mesh 2023: வேத பஞ்சாங்கத்தின் படி, குரு பகவான் வியாழன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னோக்கி பயணிக்கப் போகிறது, இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 3, 2023, 05:01 PM IST
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவு இருக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
12 ஆண்டுக்கு பிறகு அற்புத நிகழ்வு.. குருவால் இந்த ராசிகளுக்கு செல்வம் குவியும் title=

மேஷ ராசியில் நாளை மாலை குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார் 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் மங்கள கிரகங்களில் ஒன்றாக விளங்கக் கூடியவர் குரு பகவான். மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து வகையான செல்வங்களுக்கும் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். அதன்படி தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது நாளை (செப்டம்பர் 4ஆம் தேதி) மாலை சரியாக 07.39 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைந்து தலைகீழாக பயணிக்கப் போகிறது, தொடர்ந்து 118 நாட்களுக்கு இதே ராசியில் பின்னோக்கி நகர்வார் குரு பகவான். பொதுவாக ஒரு கிரகம் பின்னோக்கி நகரும் போதெல்லாம், அதன் தாக்கம் மிக வேகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வக்ர காலத்தில் குருவின் அருளால் மூன்று ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இத்துடன் குருவின் அருளால் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடையலாம். எனவே இந்த ராசிகள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

மேஷ ராசி (Aries Zodiac Sign): குரு பகவான் வியாழனின் வக்ர இயக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் வியாழன் கிரகம் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது பின்னோக்கிச் செல்லப் போகிறது. எனவே, செப்டம்பர் 4 முதல் அடுத்த 118 நாட்கள் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காதல் திருமணத்தில் முடியலாம். அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நடக்கலாம். அதேசமயம் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வருமான ஆதாரங்கள் பெருகும். வேலையில்லாதவர்களுக்கும் புதிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க | அட்டகாசமான நற்பலன்கள்: குரு, சுக்கிரன் அருளால் நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

மிதுனம் ராசி (Gemini Zodiac Sign): வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி இயக்கம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் குரு வியாழன் உங்கள் வருமான இடத்தில் பின்னோக்கிச் செல்லப் போகிறார். அதனால் இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். மகிழ்ச்சியும் வளமும் பெருகும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். இதனுடன், மிதுன ராசிக்காரர்களின் மரியாதை பெருகும். அதே நேரத்தில், குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். மேலும், திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும்.

கடக ராசி (Cancer Zodiac Sign): குரு வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் வியாழன் உங்கள் இடைநிலை ஜாதகத்தில் பின்னோக்கி நகரத் தொடங்க உள்ளார். இதன் காரணமாக செப்டம்பர் 4 முதல் வரும் 118 நாட்கள் உங்களுக்கு மங்களகரமாக இருக்கும். இதனால் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வருமானம் பெருகும். இதனுடன், நீங்கள் மரியாதை பெறுவீர்கள். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். மேலும், இதற்கிடையில் உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில புதிய யோசனைகளில் ஈடுபடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெற்றி, பணம், புகழ்... சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளின் வாழ்க்கை நாளை முதல் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News