சனாதன தர்மத்தில் கிரகங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் அமைந்தால் கிரக தோஷங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஜாதகத்தில் ராகு தோஷம் அமைந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இதனால், நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுத்து உங்கள் கிரக தோஷத்தை அகற்றுவது அவசியம். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் ராகு தோஷம் நீங்க பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாஸ்திரங்களின்படி, ஜாதகத்தில் இருந்து ராகு தோஷத்தைப் போக்க விஷ்ணு மற்றும் சிவ பெருமானை வழிபட வேண்டும். இதற்கு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளை தண்ணீரில் போட்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனுடன், குளிக்கும் போது தண்ணீரில் தருப்பை போட்டு குளிக்கவும். இதனால் ராகு மற்றும் கேது கிரகங்கள் அமைதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஜாதகத்தில் ராகு தோஷம் நீங்கும்.


மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 


ராகு கிரகத்தை ஜபிக்கவும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகுவை ஜபிப்பதும் ஜாதகத்தில் இருந்து ராகு தோஷத்தை நீக்க ஒரு சிறந்த தீர்வாகும். இதற்கு தினமும் காலையில் தண்ணீரில் குளிக்கவும். அதன் பிறகு கோவிலுக்குச் சென்று 'ஓம் ராஹ்வே நம' என்ற ராகு மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதால் ராகு தோஷம் நீங்கும்.


சனிக்கிழமையன்று அரச மரத்தை வழிபடவும்
அகேட் ரத்தினத்தை அணிவது ராகு தோஷத்தை நீக்கவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனிக்கிழமையன்று காலையில் அரச மரத்திரக்கு தண்ணீர் ஊற்றி மாலையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுவும் ராகு தோஷம் நீங்க முக்கிய பரிகாரம். மேலும், புதன்கிழமையன்று கருப்பு நாய்க்கு இனிப்பு ரொட்டி ஊட்டுவதும் ராகு தோஷத்தை நீக்குவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ