ராகு நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வமும் செழிப்பும் பெருகும்

Rahu Transit: ராகு மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு இருப்பதால், இந்த கிரகங்களின் சேர்க்கையும் சுப பலன்களை அளிக்கிறது. பிப்ரவரி 21, 2023 வரை இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியவுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 02:43 PM IST
  • ராகு கிரகம் இன்று, அதாவது ஜூன் 14 அன்று நட்சத்திரத்தை மாற்றப் போகிறது.
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணம் தற்போது கிடைக்கும்.
  • துலா ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ராகு நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வமும் செழிப்பும் பெருகும் title=

ராகு நட்சத்திரப் பெயர்ச்சி 2022: ராகு கிரகம் இன்று, அதாவது ஜூன் 14 அன்று நட்சத்திரத்தை மாற்றப் போகிறது. தற்போது ராகு மேஷம் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார். மேஷ ராசியில் சுக்கிரனும் இருக்கிறார். 

இப்போது ராகு சுக்கிரனுக்கு சொந்தமான பரணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகு மற்றும் சுக்கிரனின் இரட்டை இணைப்பு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரத்தைக் கொண்டு வந்திருக்கிறது. 

இந்த கிரகங்களுக்கு இடையே நட்பு உணர்வு இருப்பதால், இந்த கிரகங்களின் சேர்க்கையும் சுப பலன்களை அளிக்கிறது. ராகு பிப்ரவரி 21, 2023 வரை இந்த ராசியில் இருப்பார். அதுவரை இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியவுள்ளனர். 

மேலும் படிக்க | இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள் 

இந்த ராசிக்காரர்களின் மீது அருள் மழை பொழியவுள்ளார் ராகு 

மேஷம்: 

ராகுவின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினரின் வாழ்க்கையை மாற்றும். ராகு சுக்கிரனுடன் மேஷ ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு அபரிமிதமான செல்வத்தைத் தருவார். 

மேஷ ராசிக்கார்ரகளுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணம் தற்போது கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் பெறுவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் ஏற்ற காலமாக இது இருக்கும். முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படும்.

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன். ராகு சுக்கிரனுக்கு சொந்தமான பரணி நட்சத்திரத்தில் நுழைவதால் இந்த நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கும் மிகவும் சுபமாக அமையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலம் புதிய வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும். 

இந்த காலத்தில் ரிஷப ராசிக்கார்ரகளுக்கு பெரிய பதவி வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானத்தில் வலுவான அதிகரிப்பு இருக்கக்கூடும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். பணியிடத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும்.

துலாம்: 

துலா ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்கு அதிபதியும் சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் ராகுவுக்கு நட்பு இருப்பதால், துலா ராசிக்காரர்களுக்கு செல்வமும் சிறப்பும் கூடி வரும். 

உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்க நல்ல நேரமாக இது இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். பதவி உயர்வு ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக நடக்காமல் தாமதம் ஆகிவந்த பணிகளும் தற்போது முடிவடையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News