சூரியன்-சனி சேர்க்கை 2023: வேத சாஸ்திரத்தின் படி, சூரியன் சனியின் தந்தை ஆவார். இரு கிரகங்களும் பகை உணர்வு கொண்ட கிரகங்களாகவும் பார்க்கப்படுகின்றன. 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கப் போகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். சூரியன் மரியாதை, புகழ் மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறார். மறுபுறம், சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமாவார். இப்படிப்பட்ட நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக அமர்வது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரப்போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 17, 2023ல் சனி கும்ப ராசியிலும், பிப்ரவரி 13ல் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்க உள்ளனர். இதன் பிறகு ஒரே ராசியில் சூரியனும் சனியும் இணைந்திருக்கும். இது இதற்கு முன்பு 1993 ஆம் ஆண்டு நடந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமையப் போகிறது. இதன் காரணமாக  ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மார்ச் 14 வரை சனி பகவானும் சூரிய பகவானும் கும்ப ராசியில் இருக்கப் போகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். 


இவர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்


இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனி தனது ராசியை மாற்றுகிறார். 30 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார். இந்த சனி பெயர்ச்சி வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி காரணமாக மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். மேலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கும் மகரம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர்களுக்கு இதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 


மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் 


கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் 


ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் இருக்கும். இது தவிர மகர ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் இருக்கும். மறுபுறம், கும்பத்தில் இரண்டாவது கட்டமும் மீன ராசியில் முதல் கட்டமும் தொடங்கும். 


சனிதேவரை மகிழ்விப்பதற்கான வழிகள்: 


- சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது,  சனி சாலிசா சொல்வது நல்ல பலன்களை அளிக்கும். பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது நல்லது. 


- அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும். 


- ஏழை எளியவர்கள், தேவையில் இருப்பவர்கள் என இப்படிப்பட்ட நலிந்தோருக்கு செய்யும் உதவிகள் மூலம் சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். 


- சனி சாலிசாவை சொல்வது நல்ல பலன் தரும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு உதயம் 2023: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் ‘சில’ ராசிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ