மேஷத்தில் குரு பெயர்ச்சி: ஜோதிடத்தில், குரு பிரகஸ்பதி, அதாவது வியாழன் கிரகம் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். வியாழன் கிரகம் நல்ல அதிர்ஷ்டம், திருமணம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாகும். ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் சுபமாக இருந்தால், அவர் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுகிறார். அவர் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும் குறைவே இருக்காது. வியாழனின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழன் கிரகம் 2023 ஆம் ஆண்டு பெயர்ச்சியாகவுள்ளது. ஏப்ரல் 22, 2023 அன்று, வியாழன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழைகிறார். வியாழனின் ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்கும். வியாழன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சுபமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் அதிகம் இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். 2023 ஆம் ஆண்டில், வியாழன் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறார் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


மேஷ ராசி: 


வியாழன் சஞ்சாரத்தால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். ஏனெனில் வியாழன் தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள்தான் பிரவேசிக்கவுள்ளார். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் பதவி, அதிகப்படியான சம்பள உயர்வு ஆகியவற்றை பெறுவார்கள். 


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும் 


தொழிலதிபர்களும் லாபம் அடைவார்கள். குழந்தைகள் மூலம் பல நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பழைய விவகாரம் ஒன்று தீர்ந்து உங்களுக்கு சாதகமான முடிவு வரும்.


மிதுன ராசி: 


மிதுன ராசிக்காரர்கள் வியாழனின் ராசி மாற்றத்தால் மிகுந்த பலன் அடைவார்கள். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கத் தொடங்கும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். பழைய முதலீடு நன்மை தரும். அபாயகரமான முதலீடும் லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாக இருக்கும். பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும்.


தனுசு ராசி: 


தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் திடீர் பண ஆதாயத்தைத் தரும். குறிப்பாக வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இது மிக நல்ல காலமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது குரு பகவானின் அருளால் திருமணம் நிச்சயம் ஆகும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ