சுக்கிரன் - புதன் சேர்க்கை 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில நேரங்களில் ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும்பொது அந்த ராசியில் ஏற்கனவே மற்றொரு கிரகம் இருப்பதுண்டு. இதனால் கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட சேர்க்கைகள் ராசிகளுக்கு நல்லதாக கருதப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 31ம் தேதி மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரத்தின் சேர்க்கை நடக்கப் போகிறது. இந்த நாளில் புதன் மேஷ ராசியில் நுழைவார். இங்கு ஏற்கனவே சுக்கிரம் கிரகம் உள்ளது. இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கி சிறப்பான லாபம் உண்டாகும். இந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


கடகம்


ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் சிறப்பாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இது மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்கள் அனைத்து பணிகளிலும் இந்த யோகத்தின் காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் ஏதேனும் புதிய வேலை செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.


மேலும் படிக்க | எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி


சிம்மம் 


லக்ஷ்மி நாராயண யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இந்த ஸ்தானம் விதி மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கான இடமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிர்ஷ்டம் எப்போதும் உங்களுடன் இருக்கும். தொழில்-வியாபாரம் காரணமாக பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. நீங்கள் தற்போது பணிபுரியும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலத்தில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இப்போது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.


மிதுனம்


லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். உங்கள் ராசிக்கு வருமான வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாக்கப்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களின் வாழ்க்கையில் திருமணம் நிச்சயம் ஆகும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் உண்டாகும். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வது இந்த காலகட்டத்தில் நன்மை பயக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராம நவமியன்று இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், அபூர்வ யோக பலன் தரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ