புதன் அஸ்தமனத்தால் உருவான அபூர்வ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி

Budh Asta: 50 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அபூர்வமான ராஜயோகம் உருவாகி இருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. இந்த ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் செல்வத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2023, 02:10 PM IST
  • புதனின் இயக்கத்தால் உருவாகும் ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் தரும்.
  • வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டிலுமே லாபம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணைக்கும் இந்த காலம் மிக நன்றாக இருக்கும்.
புதன் அஸ்தமனத்தால் உருவான அபூர்வ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி

புதன் பெயர்ச்சி மற்றும் அஸ்தமனம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. புதன் செல்வம், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் தர்க்கத்தின் காரணியான கிரகமாகும். இந்த நேரத்தில் புதன் அஸ்தமன நிலையில் உள்ளது. பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும்போது பலவீனமாக இருப்பதுண்டு. அதே வகையில் புதனும் அஸ்தமன நிலையில் பலவீனமாகவுள்ளார். புதனின் இந்த நிலை காரணமாக சில ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் நீச்சபங்க ராஜயோகம் உருவாகி வருகிறது. 

இந்த ராசிக்காரர்களுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அபூர்வமான ராஜயோகம் உருவாகி இருப்பது இவர்களுக்கு மிகவும் உகந்தது. இந்த ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் செல்வத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். இந்த ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் உருவான நீச்சபங்க ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக இந்த முறை தொழிலதிபர்களுக்கு பெரும் லாபத்தை தரும். இந்த காலத்தில் பெரிய ஒப்பந்தங்களை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மறுபுறம், அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். 

மேலும் படிக்க | Budh Asta 2023: வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்படலாம்... இந்த 4 ராசியினருக்கு ரொம்ப ரொம்ப கவனம்!

கன்னி: 

புதனின் இயக்கத்தால் உருவாகும் ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் தரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டிலுமே லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கும் இந்த காலம் மிக நன்றாக இருக்கும். இந்த காலத்தில் சொத்து வாங்கலாம். உங்கள் அனைத்து செயல்களிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

தனுசு: 

புதன் அஸ்தமனத்தால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் திருமண வாழ்வில் பெரும் பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: 

புதனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருந்தாலும், புதன் சஞ்சாரம் சிறிது காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தரப் போகிறது. தன் பேச்சின் பலத்தால் பல நன்மைகளை பெறுவார்கள். நீண்ட நாட்களாக இவர்களுக்கு இருந்துவந்த பெரிய ஆசைகள் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 3 ராசிகள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News