சனி பகவானின் திசை மாற்றம் 2022, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றி, அதன் வேகத்தை மாற்றி மற்ற கிரகங்களுடன் தொடர்பு கொள்கிறது. அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றுகிறார். தற்போது வக்ர நிலையில், அதாவது தலைகீழ் இயக்கத்தில் இருக்கும் சனீஸ்வரன், அக்டோபர் 23 அன்று நேர் இயக்கத்துக்கு மாறுவார். சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் தனது பாதையை மாற்றுவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் நேர் இயக்கத்திற்கான மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முறை சனி பகவானின் நிலை மாற்றம்  'அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகத்தை' ஏற்படுத்தும். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கப்போகின்றது. 


இந்த 3 ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கவுள்ளன


மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு நிலை மாறிய சனி பகவான் பெரிய பலன்களைத் தருவார். அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் பண பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். பல நாட்களாக சிக்கியிருந்த பணத்தைப் பெறுவீர்கள். பணியில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமையை பலரும் பாராட்டுவார்கள். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | தீபாவளிக்கு பிறகு இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை பொழியும் 


தனுசு:


தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேர் இயக்கம் பல வித பலன்களைத் தரும். சனிபகவான் இந்த ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பணத்திற்கும், பேச்சுக்கும் உரிய ஸ்தானமாகும். தனுசு ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். வருமானம் கூடும்.


எதிர்பாராத பண ஆதாயமும் உண்டாகும். வேலை தேடுபவர்களின் காத்திருப்பு நிறைவடையும். சிரந்ததொரு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் இனிமையான பேச்சாற்றலால், பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். 


மீனம்: 


சனி பகவானின் மாற்றத்தால் உருவாகும் அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வருமானம் பெருகும், பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களும், அரசுத் துறையில் பணிபுரிபவர்களும் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.


குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுகு இடையே புரிதல் அதிகரிக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குருவின் வக்ர கதி: பண வரவால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடப் போகும் ராசிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ