குருவின் வக்ர கதி: பண வரவால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடப் போகும் ராசிகள்!

Jupiter Retrograde: குரு பகவானின் வக்ர நிலையால் தீபாவளியில் இருந்து சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கும்... பிரச்சனைகளை பார்த்து சலித்துப் போனவர்களுக்கு ஆசுவாசம் கிடைக்கும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2022, 08:15 PM IST
  • மிதுன ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அமோகமாக இருக்கும்
  • தீபாவளியில் இருந்து மகிழ்ச்சி பொங்கும்
  • ரிஷப ராசியினருக்கு வருமானம் பெறுகும்
குருவின் வக்ர கதி: பண வரவால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடப் போகும் ராசிகள்!  title=

குரு வக்ர பெயர்ச்சி 2022: நவக்கிரகங்களில், வியாழன் என்று அழைக்கப்படும் தேவ குரு பிருஹஸ்பதி, அறிவு, ஞானம், குழந்தைகள், கல்வி, ஆன்மீகம், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரண கர்த்தாவான கிரகமாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி தேவ குரு வியாழன், கடகத்தில் உச்சத்திலும், மகரத்தில் நீச்சமாகவும் இருக்கிறார். 

பஞ்சாங்கங்களின்படி, 2022ம் ஆண்டு, 29 ஜூலை (வியாழன்) அன்று, மீன ராசியில் வக்ரமானார் குரு. நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு குரு பகவான் தனது இயல்பான இயக்கத்திற்கு மாறுவார். வியாழனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு அசுபராக மாறிய குரு, சிலருக்கு சுப பலன்களைக் கொடுக்கிறார். குரு பகவானின் வக்ர நிலையால், சுப பலன்களின் தாக்கத்தில் உள்ள ராசிக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சியானதாக இருக்கும்.

மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

குருவின் வக்ர நிலை இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்:

மகாபாரதத்தின் படி, தேவகுரு பிருஹஸ்பதி மகரிஷி அங்கீராவின் மகன். சாஸ்திரங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி வாழை மரத்தை குருவாகக் கொண்டு வழிபடுவதன் மூலம் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். தேவ குருவின் நிறம் மஞ்சள் என்பதல் மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

குருவின் வக்ரகதியால் பயனடையும் ராசிகள்:

ரிஷபம் : தேவகுரு வியாழன், மீன ராசியில் இருப்பது ரிஷப ராசியினருக்கு நல்ல காலத்தைக் கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும், வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. உறவில் இனிமை இருக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும்.

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு, புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களால் முன்னேற முடியும். வியாபாரத்தில் பெரிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆவார்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர கதியின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள். அதிக லாபம் பெறுவார்கள். தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. 

கும்பம்: நிதி நிலை வலுவாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டுகள் வந்து  குவியும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News