சனிப்பெயர்ச்சி 2022: ஜூலை 13 ஆம் தேதி, சனி பகவான் வக்ரமாகி, அதாவது பிற்போக்காக நகர்ந்து மகர ராசியில் நுழைந்தார். ஜனவரி 2023 வரை இந்த ராசியில் அவர் இருப்பார். இருப்பினும், இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான் மார்க்கியாவார், அதாவது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். சனி பகவானின் இந்த நிலையில், 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும். பொதுவாக சனி பகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிலை மாற்றம் 3 ராசிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. சனிபகவானின் அருளால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அடைவார்கள். மார்க்கி சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்கி சனி இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை பிரகாசிக்கச் செய்வார்


மகரம்:


சனி பகவான் மகர ராசியிலேயே இருக்கிறார், இதே ராசியில் மார்க்கியாவார். சனி சஞ்சரிக்கும் போது, ​​மகர ராசியில் ஷஷ் என்ற பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகும். இது இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை! 


கும்பம்:


கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த பயணங்களால் அனுகூலமான பல பலன்களை பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் பெற விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என காத்திருப்பவர்களின் கனவு நிறைவேறும். பண வரவு அதிகமாக இருக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். இருப்பினும் வருமானம் அதிகரிப்பதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள்.


மீனம்:


மீன ராசிக்காரர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மாற்றத்தை தேடுபவர்கள் இந்த நேரத்தில் அதற்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நன்றாக உழைத்தால், அபரிமிதமான முன்னேற்றத்தை அடையலாம். 


நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் உழைத்து முன்னேறினால், அனைத்து பணிகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் பண மழை, குபேரயோகம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ