கன்னி ராசியில் புதனின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம்

Mars Transit: கன்னி ராசியில் தங்கி புதன் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரலாசிக்கச் செய்வார். இவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2022, 10:58 AM IST
  • கன்னி ராசியில் புதனின் மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
கன்னி ராசியில் புதனின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம் title=

கன்னி ராசியில் புதனின் கோச்சாரம்: புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைந்துள்ளது. சிம்ம ராசியில் இருந்து வெளிவந்து கன்னி ராசிக்குள் புதன் பிரவேசித்துள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் கிரகம் 21 ஆகஸ்ட் 2022 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.14 மணிக்கு கன்னி ராசிக்கு மாறியுள்ளது. புதன் 34 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 25 வரை இந்த ராசியில் இருக்கும். புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். கன்னி ராசியில் தங்கி புதன் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரலாசிக்கச் செய்வார். இவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 ராசிக்கார்ரகளுக்கான விரிவான ராசிபலனை இங்கு காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களை அளிக்கும்.

மிதுனம்: 

கன்னி ராசியில் புதனின் மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும். அவர்களது குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களை ஈர்ப்பதில் உங்கள் ஆளுமை வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு இதுவே சிறந்த நேரம். நீங்கள் தொடங்கும், அனைத்து தொழிலகளிலும், செய்யும் பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் 22 முதல் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பத்திரிக்கை, எழுத்து, ஆலோசனை, நடிப்பு, இயக்கம் அல்லது ஆங்கரிங் போன்றவற்றில் தொடர்புடையவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த நேரத்தில் தொழில் மற்றும் பணியிடத்தில் அதிகப்படியான லாபமும் வெற்றியும் கிடைக்கும்.

சிம்மம்:

புதனின் இந்த ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலத்தை கொண்டு வந்துள்ளது. சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வீக நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். கன்னி ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் போது இவர்களின் புகழும் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல சூழல் உருவாகும்.

கன்னி: 

புதன் தனது சொந்த ராசியான கன்னியில் சஞ்சரிப்பது வணிக ரீதியாக மிகவும் சாதகமான பலன்களைத் தரும். அவர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனைகளை அடையலாம். அவர்களின் தன்னம்பிக்கை பல விஷயங்களில் வெற்றியைத் தரும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்

மேலும் படிக்க | ஆகஸ்ட் 21ல் புதன் பெயர்ச்சி, இந்த 6 ராசிகளுக்கு இனி கஷ்ட காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News