சுக்கிரன் மாற்றம்: திரிகோண ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகும் ராசிகள்
Venus Transit: சுக்கிரன் தனது ராசியை மாற்றுவதால் திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரன் ராசி பரிவர்ததனை 2022: ஜோதிடத்தின்படி, இன்று, அக்டோபர் 18, 2022 அன்று, சுக்கிரன் கிரகம் பெயர்ச்சியாகி தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைகிறது. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் தனது ராசியை மாற்றுவதால் திரிகோண ராஜயோகம் உருவாகிறது.
இந்த திரிகோண ராஜயோகம் அனைத்து 12 ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி, அன்பு, அழகு, ஈர்ப்பு ஆகியவற்றின் கிரகமாக இருப்பதால், இது மக்களின் வாழ்க்கையின் இந்த பகுதிகளை பாதிக்கும். அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும், சுக்கிரனின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் பண லாபம்
கன்னி:
சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் திரிகோண ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஊதியம் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். வீடு, மனை, வாகனம், மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகலாம்.
வாழ்க்கைத்துணை ஆரோக்கியமாக இருப்பார். அவருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த பயணத்தில் செல்வீர்கள். இந்த பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி; இளைஞர்களே உங்களின் காதலுக்கு பச்சைக்கொடி கிடைக்கும் நேரம்!
மகரம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான சுப பலன்களைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான காலம் இது.
பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமணம் நிச்சயம் ஆகி நடக்கலாம். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அனைத்திலும் பரிபூரண வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பயணம் செல்வீர்கள், சுப பலன்களைப் பெறுவீர்கள். முதலீடு செய்ய இது நல்ல நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வணிகத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். தொழில்-வியாபாரத்தில் லாபமும், மரியாதையும் மதிப்பும் கூடும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ