இன்னும் 11 நாட்களே..செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்
Mangal Margi 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி, ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சியாகப் போகிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கோளும் அவ்வப்போது நகர்ந்து கொண்டே இருக்கும். இதை நாம் பெயர்ச்சி என்கிறோம். அந்தவகையில் இந்த மாதத்தின முதல் பெயர்ச்சி வருகிற ஜனவரி 13 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசியில் நடக்கவிருக்கிறது. ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசியிலும் தென்படும். பொதுவாக செவ்வாய் தைரியத்தின் சின்னமாக கருதப்படுகிறது. அந்தவகையில் செவ்வா பெயர்ச்சியின் காரணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொருளாதார ரீதியாகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. இது வீடு மற்றும் பணியிடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பயணம் செய்வதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | ராகு பெயர்ச்சியினால் சிக்கலில் சிக்க போகும் ‘சில’ ராசிகள்!
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு 11ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது வருமானம் மற்றும் லாபத்தை அள்ளித் தருவார். இந்த காலகட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம், பதவி உயர்வு கிடைக்கும். நீதிமன்றம் முதலிய விஷயங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் கடின உழைப்பால் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.
மீன ராசி
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாகப் போகிறார், இதனால் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் அதில் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ