செவ்வாய் வக்ர நிவர்த்தி: ஜனவரி 15 முதல் 5 ராசிகளுக்கு ராஜயோகம், அமோகமான வாழ்க்கை

Mars Transit: ரிஷப ராசியில் செவ்வாயின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2022, 11:27 AM IST
  • ரிஷப ராசியில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்து நேரடி இயக்கத்துக்கு மாறவுள்ளார்.
  • இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள்.
  • இவர்கள் இப்போது தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறத் தொடங்குவார்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி: ஜனவரி 15 முதல் 5 ராசிகளுக்கு ராஜயோகம், அமோகமான வாழ்க்கை title=

செவ்வாய் பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். ஜனவரி 13, 2023 முதல் செவ்வாய் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவார். தைரியம், வலிமை, நிலம், சொத்து ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாயின் நேரடி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக கிரகங்களின் வக்ர நிவர்த்தி ராசிகளில் நல்ல பலன்களை ஏற்படுத்தும். செவ்வாயின் வக்ர நிவர்த்தியும் பல வித நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, ரிஷப ராசியில் செவ்வாயின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

செவ்வாயின் வக்ர நிவர்த்தி இந்த ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும்

ரிஷபம்: 

ரிஷப ராசியில் செவ்வாய்  வக்ர நிவர்த்தி அடைந்து நேரடி இயக்கத்துக்கு மாறவுள்ளார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். இவர்கள் இப்போது தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறத் தொடங்குவார்கள். இவ்வளவு நாட்களாக இருந்துவந்த பல பெரிய ஆசைகள் நிறைவேறும். நீண்ட பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், அதற்கான சரியான நேரம் இது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | மகரத்தில் புதன்! புத்தாண்டை வரவேற்கும் புத்தி காரகர் புதனின் பெயர்ச்சி 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர நிவர்த்தி மங்கலம் மிகுந்த பலன்களைத் தரும். பணியிடத்தில் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். புதிய டெண்டருக்கு விண்ணப்பித்தால் வெற்றி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பாலும் நேர்மையாலும் உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும், முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: 

செவ்வாயின் நேரடி சஞ்சாரத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆன்மீகப் பணியில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.

தனுசு: 

செவ்வாயின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு முதலீட்டில் லாபத்தைத் தரும். எடுத்த பணிகளை முடிப்பதில் மும்முரம் காட்டுவீர்கள். புதிய வேலைக்கான தேடல் முடிவுக்கு வரும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு நேரம் கொடுங்கள், அவருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

மீனம்: 

செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மீன ராசிக்காரர்களின் ஆளுமையிலும் மாற்றங்களைக் கொண்டுவரும். தைரியம், வலிமை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மீன ராசிக்காரர்களால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News