புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தொழில் வியாபாரத்தில் மகத்தான வெற்றி, கனவுகள் நிஜமாகும்

New Year 2023 Horoscope: 2023 ஆம் ஆண்டில், எந்த ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் விரும்பிய வெற்றியைப் பெறுவார்கள்? யாருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்? புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசி பற்றி ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2023, 11:35 AM IST
  • 30 வருடங்கள் கழித்து கும்ப ராசிக்கு வரும் சனி பகவான் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
  • அச்சமின்றி முதலீடுகளை செய்யலாம்.
புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தொழில் வியாபாரத்தில் மகத்தான வெற்றி, கனவுகள் நிஜமாகும்

புத்தாண்டு ராசிபலன்: புத்தாண்டு பிறந்துவிட்டது. துவங்கி இருக்கும் இந்த புதிய ஆண்டு, தங்களுக்கு மங்களகரமானதாக இருக்க வேண்டும் என்றும், கனவுகள் நிஜமாகி அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்றும் அனைவரும் காத்திருக்கிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கவும் அனைவரும் முழு முனைப்புடன் தயாராக உள்ளனர். எனினும், சில நேரங்களில், சிலருக்கு, பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்காமலும், கடின உழைப்பில் ஈடுபடாமலும் அதிகப்படியான வெற்றி கிடைத்து விடுகிறது. இதற்கு அவர்களது கிரக நிலைகளும் பெரிய காரணமாக இருக்கின்றன. 

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த புத்தாண்டில், 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், யாருக்கு கிரக மாற்றங்களின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மிதுனதுக்கும் சிம்மத்துக்கும் அமோக வாழ்வு 

2023 ஆம் ஆண்டில் மிதுனம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.  இவை இரண்டும் இந்த புத்தாண்டின் மிகவும் அதிர்ஷ்டசாலி ராசிகளாக பார்க்கப்படுகின்றன. மிதுன ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் இருக்கும் சனி எதிர்பாராத வெற்றியின் குறிகாட்டியாக இருக்கிறார். ஏப்ரல் 24, 2030 க்குப் பிறகு சிம்மத்தில், அதிர்ஷ்ட வீட்டில் வியாழன் அமர்ந்து எதிர்பாராத வெற்றியை அளிப்பார். 

மிதுனத்துக்கு அதிக நன்மை தரும் ஆண்டு

இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை தரும் ஆண்டாகக் கூறப்படுகிறது. சில எதிர்பாராத லாபத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உங்களுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு நபர் மூலம் மிகப்பெரிய நன்மை உங்களுக்கு கிடைக்கவுள்ளது. 

சிம்மத்துக்க் சமூக கவுரவம் உயரும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூக கௌரவம், அந்தஸ்து, மதிப்பு, மரியாதை உயரும். சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணி இடத்தில் பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதர்வை பெறுவீர்கள்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் அதிஷ்டம்! 

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் நற்பலன்கள் கிடைக்கும்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சியாலும், ஏப்ரல் மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சியாலும் செல்வச் செழிப்பைப் பெறுவார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபார ரீதியாக இந்த வருடம் அதிசயமான பலன்களைத் தரும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தாக்கத்தால் சமூக மரியாதையும், புகழும் உண்டாகும். பெரிய பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வேலை, வியாபாரம் இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

30 வருடங்கள் கழித்து கும்ப ராசிக்கு வரும் சனி பகவான் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும். அச்சமின்றி முதலீடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் அதிகப்படியான நன்மைகள் உருவாகும். 

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு ராசிக்காரர்களுக்கும் 2023ல் திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

2023-ம் ஆண்டு எந்தத் துறையில் யார் முன்னேறுவார்கள்?

- 2023 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிக லாபம் கிடைக்கும்.

- ரிஷப ராசிக்காரர்களுக்கு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 

- கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சில நற்பலன்கள் கிடைக்கும். 

- மீன ராசிக்காரர்கள் நிதி நன்மைகளையும் செல்வத்தையும் பெறுவார்கள். 

- சிம்ம ராசிக்காரர்கள் கல்வித்துறையில் முன்னணியில் இருப்பார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜனவரியில் நடக்க உள்ள 4 முக்கிய பெயர்ச்சிகள், இந்த ராசிகளுக்கு சிக்கல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News