ஆடி மாதம் இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும்
Rasipalan Benefits In Aadi Month: ஆடி மாதத்தில், சிவபெருமானும், லட்சுமி தேவியும் சில ராசிக்காரர்களுக்கு அதீத நல்ல பலன்களை தருவார்கள். அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் லட்சுமி தேவியை வழிபட சிறந்த மாதமாக கருதப்படுகிறது. நேர்மையான இதயத்துடன் மகா லட்சுமியை வழிபடுபவர்களுக்கு அனைத்து கஷ்டங்களும் நீங்கி சிறப்பு அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆடி மாதத்தில், அன்னை லட்சுமியின் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல், மகாதேவனின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுவீர்கள். ஆடி மாதம் சிலருக்கு மிகவும் நன்மையாக இருக்கும் அதேவே சிலருக்கு சில இன்னல்கள் சந்திக்க நேரிடலாம். ஏனெனில் சில ராசிகளில் அன்னை லட்மியின் அருள் நிலைத்திருக்கும். ஆடி மாதத்தில் எந்தெந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் மீது அன்னை லட்சுமியின் அருள் பொழியப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமி கருணை காட்டுவார்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார் . இந்த மாதம் ஆதரவற்ற ஒருவருக்கு உதவுவது தொலைநோக்குப் பலன்களைத் தரும். கோர்ட்டில் வழக்கு இருந்தால், இந்த மாதம் தீர்வு காணப்படும். மேலும் இந்தக மாதம் அன்னை லட்சுமியின் முழு அருள் உங்கள் மீது இருக்கும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார்
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது . இந்த ராசிக்காரர்களின் கௌரவமும் மரியாதையும் உயரும் வாய்ப்புகள் உண்டு. எங்கிருந்தோ திடீர் பணம் வரும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் கடினமாக உழைத்தால் அதன் முழு பலனும் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் தங்களின் மெல்லிய குரலால் சமூகத்தில் மரியாதையும் கௌரவத்தையும் பெறுவார்கள். இந்த நேரம் உங்களுக்கு பதவி, பணம் மற்றும் கௌரவத்தை அள்ளித் தரும். அன்னை சரஸ்வதியின் அருளால், நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்ய முடியும். இந்த நேரத்தில் நீங்கள் அரசியலில் முயற்சி செய்ய விரும்பினால், அது உங்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அன்னை லட்சுமியின் அருள் மிகவும் ஆதீதமாக கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க இந்த மாதம் மிகவும் நல்லது. இந்த மாதம் எங்கிருந்தாவது பெரிய பணவரவு கிடைக்கக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, பதவி உயர்வு கிடைக்கலாம். சொத்து வாங்குவதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் இதுவே உகந்த நேரம்.
மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சுபச் செய்திகளை அள்ளித் தரும். எந்த ஒரு நல்ல தகவல் கிடைத்தாலும் உற்சாகம் அதிகமாக இருக்கும். அன்னை லட்சுமியின் அருள் உங்கள் மீது பொழியப்போகிறது. இந்த மாதம் தானம் செய்வதற்கு நன்மை தரும். நீங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே உங்களுக்கு சிறந்த நேரம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ