Jupiter Transit 2022: ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் நன்னெறியுடன் நடந்து, திருப்தி, சந்தோஷம் மற்றும் நிம்மதி ஆகிய அனைத்தையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வியாழன் கிரகம் தீபாவளிக்குப் பிறகு  தனது நிலையை மாற்றிக் கொள்ளப்ப் போகிறது. இது 4 ராசிக்காரர்களுக்குப் சிறந்த பலன்களை அளிக்கும். வியாழன் கிரகம் ஜூலை 29 அன்று வியாழன் மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆனார். இப்போது, நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு குரு பகவான் நேர் இயக்கத்தில் மாறுவார்.  இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை அடையப்போகிறார்கள் என அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழ்கண்ட 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை குரு பிரகாசிப்பார்:


ரிஷபம்:  குரு பெயர்ச்சி காலத்தில், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் 11வது வீட்டில் இருக்கப் போகிறது, இதன் மூலம் இந்த ராசிக்காரகளின் வருமானம் அதிகரிக்கும், பண ஆதாயங்கள் இருக்கும். வேலையில் வெற்றி பெறலாம். ரிஷபம் ராசிக்காரர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டு புதிய வருமானங்கள் உருவாகும். இதனுடன் வியாபாரத்திலும் லாபம் ஈட்டலாம். இந்த ராசிக்காரர்கள் வாகனங்கள், சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.


மிதுனம்: வியாழன் கிரகம் மிதுனத்தின் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார், அதன் பிறகு உங்கள் பொன்னான நாட்கள் தொடங்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம், இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் ஆர்டர்களைப் பெற்று நல்ல லாபத்தைப் பெறலாம்.


மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 


கடகம்: வியாழன் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார், இதன் காரணமாக அதிர்ஷ்ட காற்று வீசும். குறைவில்லாத வாழ்வு இருக்கும். குரு சஞ்சாரம் செய்தவுடன் கடக ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் கைகூடும். வியாபாரம் செய்பவர்கள் வணிக பயணத்தை மேற்கொள்ளலாம், அங்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


கும்பம்: வியாழன் கிரகம் கும்பத்தின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அது உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில் பணியிடத்தில் பாராட்டப்படலாம். கற்பித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ