Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கடந்த குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார். இந்த பயணமானது வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும், மரியாதையும், கௌரமும் அதிகரிக்கும். இப்போது குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு ஆகஸ்ட் வரை சூப்பராக இருக்கும் என்பதைக் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம் (Taurus Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சி (jupiter transit in rohini nakshatram) ரிஷப ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை கூடும், அதனுடன் கௌரமும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமைகின்றது. பணவரவில் எந்த குறையும். 


மேலும் படிக்க | பண்டரிபுரம் விட்டலனுக்கு பாதயாத்திரை! பால் காவடி தயிர்-காவடி என லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!


சிம்மம் (Leo Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் நல்ல சூழல் இருக்கும். உங்களின் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த சரியான நேரம், லாபம் பெருகும். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக தந்தையுடனா உறவு சிறப்பாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 


தனுசு (Sagittarius Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நிதி ஆதாயம் உண்டாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை வழங்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Saturn Transit: சனி வக்ர பெயர்ச்சி: வெள்ளம் ஒருபக்கம்; வறட்சி மறுபக்கம்... தீபாவளி வரை கஷ்டம் தான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ