நவகிரகங்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும். நல்ல செயல்களை தொடங்குவதற்கு தகாத நேரமாக 1.30 மணி நேர இராகு கால நேரம் கருதப்பட்டு வருகிறது. எனினும், அந்த இராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். ராகு காலத்தில் பூஜை செய்தால், ஒருவரிடம் உள்ள தீய சக்திகள் வெளியேறும். மகா தந்திர சக்திகள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்க ராகு கால பூஜை செய்வது மிக சிறந்த பலனைத் தரும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க் கிழமையன்று நல்ல மஞ்சள் நிறமுள்ள ஐந்து எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றை அம்பாளின் திருவடிகளில் பிழிந்துவிட்டு, எலுமிச்சைத் தோல்களை எதிர்புறமாக மடக்கி கிண்ணம் போல் அமைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து எலுமிச்சை மூடிகளின் மொத்தம் பத்து விளக்குகள் செய்யலாம். அதில் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு ஒன்பது விளக்குகளை மட்டும் அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். 


மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: மார்ச் 6 வரை இந்த ராசிகளுக்கு சோதனை காலம், சூதானமா இருங்க!!


செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிறவாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி அன்னை ஸ்ரீ துர்க்கையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு மிகவும் விஷேசம்.


ராகு கால பூஜையின் போது இராகு கால துர்க்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாராணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முதலியவற்றை பக்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம். ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், செவ்வாய் கிழமை ராகு காலப்பூஜை செய்யலாம். எனினும், வீட்டில் ராகு கால பூஜை செய்யக்கூடாது. ராகு கால பூஜை செய்ய நினைப்போர் வீட்டில் துர்கைக்கு விளக்கேற்றிவிட்டு, கோயிலுக்கு சென்று தான் பூஜை செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் சோமாவதி அமாவாசை! விரதம் அனுஷ்டிக்கும் முறை!


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ