Inauspicious effects of Venus Transit: ஜோதிடத்தில் சுக்கிரன் கிரகம், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணியாக கருதப்படுகிறது. எனினும் சுக்கிரன் பயிற்சியினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன், பிப்ரவரி 12ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். சுக்கிரனின் இந்த சம்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் அதே வேளையில், சில ராசிகளுக்கு மிகவும் பாதகமாக இருக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள், சுக்கிரனின் பெயர்ச்சியினால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


மிதுன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்


மிதுன ராசிக்காரர்கள், சுக்கிரன் பெயர்ச்சியினால், பல வகைகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அலுவலக வேலையில் தொழிலில், தடைகளும் சவால்களும் இருக்கும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். வேலைப்பளுவும் அதிகரிக்கும். இதனால் மன சஞ்சலத்திற்கு ஆளாகலாம். நிதி ரீதியாக நஷ்டத்தையும் சந்திக்க நேரிடலாம். இதனால் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு, கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். எனவே மிகவும் எச்சரிக்கையாக செலவு செய்யவும். வீட்டிலும், கருத்து வேறுபாடுகளால் மன அமைதி பாதிக்கப்படலாம்.


கடக ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்


கடக ராசியினரை பொறுத்தவரை பண இழப்பு, தடைகள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். திட்டமிட்டபடி வேலையை முடிக்க முடியாமல் பலவிதமான தடைகளும் நெருக்கடிகளும் உண்டாகும். பரிவர்த்தனைகளின் மிகவும் கவனமும் எச்சரிக்கையும் தேவை.. ஏனெனில் பின்னாளில் இது பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வேலையில் அதிருப்தி காரணமாக, ஈடுபாட்டுடன் வேலை செய்யும் மனம் இருக்காது. ஆனால் கவனக்குறைவாக இருக்காதீர்கள். ஏனெனில் இதற்காக பெரிய விலை கொடுக்க நேரிடலாம். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதனால் செலவுகள் ஏற்படலாம்.


விருச்சிக ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்


விருச்சிக ராசியினரை பொறுத்தவரை, சுக்கிரன் பெயர்ச்சியினால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்கள் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் மன உளைச்சல் ஏற்படும். சக ஊழியர்களால் வேலையில் தடைகள் ஏற்படலாம். உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவும். முதலீடுகள் குறித்து முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும். நன்கு ஆலோசனை செய்த பிறகு நிதி ரீதியான முடிவுகளை எடுக்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே பேச்சை கட்டுப்படுத்தவும்.


மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்...வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


சுக்கிரன் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்


சுக்கிரன் பெயர்ச்சி பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க சில பரிகாரங்களை செய்வது பலன் கொடுக்கும்.


1. சுக்கிரனை மகிழ்விக்க வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, வெண்ணிற வஸ்திரம் சமர்ப்பித்து, வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது, கெடு பலன்களை குறைக்கும்.


2. வாய்ப்பு இருந்தால், கஞ்சனூரில் உள்ள சுக்கிர பகவான் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். முடிந்தால் பரணி, பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் வழிபடுவது அதிகபட்ச பலன்களை கொடுக்கும்.


3. மொச்சை பயிரை ஊறவைத்து அதனை பசுவிற்கு உணவாகக் கொடுப்பது, சுக்கிரனை வலுப்படுத்த உதவும். இதனால் சுக்கிர பெயர்ச்சியினால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ