Budhan Peyarchi Palaangal : வாழ்க்கை திருப்தி, ஆரோக்கியம், திடமான மனதுக்கு காரகர் புதன் தான். அறிவுக்கும் ஞானத்துக்கும் காரகரான புதன் பகவானே தெளிவான சிந்தனையைக் கொடுத்து, செய்யும் செயல்களின் பலன் அறிந்து நல்லது கெட்டதை புரிந்து வேலை செய்ய வழிவகுக்கிறார். வெற்றியாளர்களுக்கும், படிப்பாளிகளுக்கும் புதன் வலுவாக இருப்பார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரை சரியான முடிவெடுக்க உதவும் புதன் தான், ஒருவரை வியாபாரத்திலும் சிறந்து விளங்கச் செய்கிறது. ஆனால், புதன் ஜாதகத்தில் வலுவிழந்து மோசமான கிரகங்களுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால், வாழ்க்கையில் பலவித போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.


புதன் செவ்வாயுடன் இணைந்தால் புத்திசாலித்தனம், மனக்கிளர்ச்சி, ஆக்ரோஷம் போன்றவை ஏற்படும். புதன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது ராகு அல்லது கேது போன்ற தீய சக்திகளுடன் இணைந்தால், சருமப் பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள் நரம்பு கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்கும். இந்த நிலையில், நாளை அதாவது ஜூலை 19ம் நாளன்று புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் புதன் யாருக்கெல்லாம் நல்ல பலன்களைத் தருவார் என தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | பட்ஜெட் டைட்டா இருக்கா... ரூ.15 ஆயிரத்திற்குள் நச்சுனு வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் - டாப் 3 மாடல்கள்!


சிம்மராசி


புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரரகளின் வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனம் அதிகரிக்கும், உலகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும். குடும்பத்துடன் ஆன்மீக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


தனுசு ராசி


நாளை நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் வசதிகளும் செல்வமும் பெருகும். செல்வம் மழையாக வந்துக் கொட்டும். சொத்து வாங்குவதில் ஆதாயம் உண்டாகலாம். இந்த நேரத்தில் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணம் ஈடேறும், நல்ல லாபத்தை பெறுவீர்கள். முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.  பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.


விருச்சிக ராசி 
புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை வசதிகள் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், அனைத்தும் சுபமாக நடக்கும், நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ