புதன் பெயர்ச்சி 2024: ஜோதிடத்தின்படி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன் மார்ச் 7-ம் தேதி மீன ராசியில் நுழைகிறார். ஏற்கனவே மீனத்தில் இருக்கும் ராகுவுடன் புதன் இணைந்தால் யாருக்கு என்ன பலன் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ராகு நிழல் கிரகம் என்றால், புதன் மங்கலமானவர். புதன் மூளையை இயக்கி நமது அறிவாற்றலுக்கு காரணமாபவர். இந்த இரு கிரகங்களும் ஒரே வீட்டில் இணைவது 12 ராசிகளில் 5 ராசிகளுக்கு நன்மையைக் கொடுக்கிறது. 
 
ராகு புத்திர யுதி 2024


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனத்தில் பெயர்ச்சியாகும் புதன், 2006ஆம் ஆண்டில் ராசியுடன் இணைந்திருந்தார். அதன்பிறகு, அதே நிலை தற்போது, 2024 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஏற்படும். இந்த ஜோதிட நிலையானது, இன்றைய நமது நாட்டின் சூழலுடன் பொருத்திப் பார்த்தால் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


புதன் கிரகம் - ராகு கிரகம்


வேலை, வியாபாரம், கூர்மையான புத்திசாலித்தனம், மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு பொறுப்பாகக் கருதப்படும் புதன் சுப கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராகு, அரசியலுக்கு காரணமான கிரகம் ஆகும். மீனத்தில் ராகுவும் புதனும் இணைவது பலருக்கு நல்லது என்றால் சிலருக்கு கெட்டதாக இருக்கும்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: எந்த எந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்?


மீனத்தில் ராகுவுடன் இணையும் புதன் - நற்பலன்கள் பெறும் ராசிகள்


ரிஷபம்


இதுவரை இல்லாத அளவு வாழ்க்கையில் நன்மை பயக்கும் ராகு - புதன் இணைப்பானது, பொருளாதார வளர்ச்சியை அள்ளிக் கொடுக்கும். முதலீடு செய்வதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்குக் அருமையான நேரம் இது.


கடக ராசி


இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகளை புதனுடன் இணையும் ராகு செய்து வைப்பார். வெளிநாட்டில் படிக்க திட்டமிட்டால் அவர்களின் கனவு நிச்சயம் நிறைவேறும். கடக ராசிக்காரர்களுக்கு பல இடங்களில் இருந்து பணம் வந்து சேரும். இந்த நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எந்தப் பயணமும் பலனளிக்கும். துணைவர் கூறும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


சிம்மம்


பொருளாதார ரீதியில் அருமையான நேரமாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும்.  ஆற்றலையும் நம்பிக்கையையும் கொடுக்கும் புதன் ராகு இணைவு, குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு காரணமாகும்.


விருச்சிகம்


மீனத்தில் இணையும் ராகுவும் புதனும் அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றி வைப்பார்கள். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். இந்த நேரம் காதல் வாழ்க்கைக்கு நன்றாக இருக்கும், மனதில் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.


மீனம்


நம்பிக்கைகள் உண்ஐயாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். பண வரத்து இருக்கும். தொழில்ரீதியிலும் நல்ல நேரமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி.. மாசி மாதத்தில் நெருக்கடிகளை சந்திக்கப் போகும் ‘சில’ ராசிகள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ