சூரிய பெயர்ச்சி.. மாசி மாதத்தில் நெருக்கடிகளை சந்திக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

Sun Transit & Unlucky Zodiacs: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், பிற கிரகங்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியும் மாற்றிக் கொள்கிறார்.

சூரியன் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்ளும் நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி கும்ப ராசிக்குள் செல்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் குழப்பமும் பிரச்சனைகளும் ஏற்படும்.

1 /6

சூரிய பெயர்ச்சி பலன்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றிக் கொள்ளும் சூரியன் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி கும்ப ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால் சிலருக்கு நெருக்கடியான காலகட்டம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

2 /6

சூரியன் கும்ப ராசிக்கு செல்லும் நிலையில், சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் வீற்றிருப்பதால் சனியும் சூரியனும் இணைவதால் சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். சூரியன் கும்ப ராசிகள் சஞ்சரிப்பதால் , பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

3 /6

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியால் வேலையில் தடை தடைகளை சந்திக்க நேரிடும். கடும் போட்டி நிலவும் இதனால் சவால்கள் அதிகரிக்கும் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். மன அழுத்தம் அதிகமாகும்.

4 /6

சிம்ம ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்கள் உடனான உறவு பாதிக்கப்படலாம். வேலையில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்காமல் மன உளைச்சல் ஏற்படலாம். நிதி விஷயத்தில் சற்று கவனம் தேவை. செய்யவில்லை என்றால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

5 /6

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சரியாக கவனம் செலுத்த முடியாமல் திட்டமிட்ட பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

6 /6

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.