2022 ஆம் ஆண்டில், சனியின் ஸ்தானத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன, 2023 ஆம் ஆண்டில் இதேபோல பல மாற்றங்கள் மீண்டும் நிகழப் போகிறது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பெயர்ச்சியாகி அதன் பிறகு சனி அஸ்தமிக்கிறார். 2023-ல் 15 நாட்களில் இரண்டு முறை 'சனி' தன் நிலையை மாற்றுகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் சுப பலன்களே கிடைக்கும்! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, கிரகங்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் சனியின் நிலை மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஜனவரி 17, அன்று, சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார், அதன் பிறகு பிப்ரவரி 3 இல் சனி அஸ்தமனமாகிறார். 15 நாட்களுக்குள் இரண்டு முறை சனியின் நிலை மாற்றம் நடைபெறுவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்திலும் அஸ்தமனத்திலும் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்! குபேரரின் செல்லப் பிள்ளைகளின் ராசி இது


ரிஷபம்: 2023-ல் சனியின் ராசி மாற்றம் மற்றும் அதன் பிறகு சனியின் அஸ்தமனம், ரிஷப ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெற்றியின் உச்சத்தை தொடுவீர்கள் என்று சொல்லலாம். செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும்.


உங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


துலாம்: சனி தேவன் துலாம் ராசிக்காரர்களிடம் கருணை காட்டுபவர். 2023ல் சனியின் சஞ்சாரம் மற்றும் சனியின் அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும். கல்வி மற்றும் தொழிலிலும் அதிர்ஷ்டமான பலன்களைப் பெறுவார்கள்.


மாணவர்கள் பெரிய கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். புதிய வேலை, பதவி உயர்வு, உயர்வு கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வியாபாரம் வளரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.


மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை


மகரம்: 2023-ம் ஆண்டு மகர ராசியில் இருந்து விலகும் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசித்து அஸ்தமிக்கிறார், இது மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். தடைபட்ட பணிகள் வேகமாக நடைபெறும். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை உயரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். பெரிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த முடியும். மொத்தத்தில் சனி மகர ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் பலன்களை தருவார்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Ezharai Nattu Sani: சனிபகவானுக்கு பிடித்த 5 ‘ராசிகள்’! உங்களுடையது எந்த ராசி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ