சனி ராசி பரிவர்தனை 2022: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. தேவகுரு வியாழனின் வக்ர பெயர்ச்சியைத் தவிர, சனி பகவானும் ஜூலையில் தனது ராசியை மாற்றுவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கர்ம பலன் தரும் சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் இந்த ராசிக்குள் நுழைந்துள்ளார். இப்போது அவர் ஜூலையில் மீண்டும் ஒருமுறை தனது ராசியை மாற்றவுள்ளார். 


சனி பகவான் ஏப்ரல் 2022 அன்று கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின்னர் அவர் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பிற்போக்கு நகர்வை மேற்கொண்டார். இப்போது ஜூலை 12, 2022 முதல், சனி கிரகம் பிற்போக்கு நிலையில் மகரத்தில் நுழைவார். சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இதன் பிறகு கும்ப ராசிக்கு திரும்புவார். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கனும் 


மேஷம்:


மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணம் சேர்ப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். உடல்நலப் பிரச்சினைகள் வரக்கூடும். எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.


பரிகாரம் - சனி பகவானை மகிழ்விக்க, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மற்றும் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். மன அழுத்த நிலை ஏற்படும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். கணவன் / மனைவி இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 


பரிகாரம்- சனிக்கிழமையன்று சனி தொடர்பான விஷயங்களை தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவுங்கள்.


தனுசு ராசி:


தனுசு ராசிக்காரர்கள் பணச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்காது. அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்க வாய்ப்பில்லை. சில நாள்பட்ட நோய்கள் தோன்றக்கூடும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்தால் பண இழப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்


பரிகாரம் - சனிக்கிழமையில் சனி கோவிலில் கடுகு எண்ணெய் / நல்லெண்ணெ கொண்டு அபிஷேகம் செய்யலாம். அரச மரத்தை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | ஆனி மாதத்தில் 5 பெயர்ச்சிகள்; பாதிப்பை நீக்கும் புதன் கிழமை பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR