சுக்கிரன் சனி சேர்க்கை 2023, ராசிகளில் அதன் தாக்கம்: கும்ப ராசியில் உருவான சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால், இன்று முதல் சிலருக்கு பொன்னான நாட்கள் தொடங்கியுள்ளன. இந்த ராசிக்காரர்களுக்கு சனி, சுக்கிரன் சேர்க்கை பல பலன்களைத் தரும். ஜனவரி 17ஆம் தேதி சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன் பிறகு தற்போது ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் நீதிக் கடவுளான சனியின் ராசியான கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடந்துள்ளது. இந்த சேர்க்கை மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அனைத்து 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த சேர்க்கையால் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இவர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன் தொழிலிலும் சிறந்த வெற்றியை பெறுவார்கள். இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.


சனி பகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் அதிகப்படியான நல்ல பலன்களை பெறவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


ரிஷபம்: 


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-சனி சேர்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கி பெரும் வெற்றி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலும், இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு பண நஷ்டம்! 


கன்னி: 


சனி, சுக்கிரன் சேர்க்கை கன்னி ராசியினருக்கு பலமான பலன்களையும் தரும். இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் தடை பட்டிருந்த பணிகள் நடக்கத் துவங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும்.


துலாம்: 


சனிப்பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி மூலம் சனி பகவானும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைந்திருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். மன அழுத்தம் நீங்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சிறந்த உடல் ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும்.


மகரம்: 


மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரன் இணைவதால் பண லாபம் உண்டாகும். துன்பங்கள் விலகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். பணி இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி-சந்திரன் கூட்டணியால் உண்டாகும் 'விஷ யோகம்' அலர்ட்! 4 ராசிகளுக்கு பண நஷ்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ