Guru Peyarchi, Jupiter Transit : ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரங்களின் ராசி மாற்ற மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக  ராசி பெயர்ச்சி, நட்சத்திர பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் குரு பெயர்ச்சியை நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். இந்த கிரகத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் அதிகப்படியாக சிறப்பான பலன்களை மட்டுமே தரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால், வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு மேஷ ராசியில் விலகி ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியாக இருந்தாலும் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபகரமான பலனைத் தரக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம் -


ரிஷபம் (Taurus Zodiac Sign) :
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு வருகிறது. இந்த குரு இடம் மாற்றத்தால் ரிஷபம் ராசிக்காரர்கள் வேலையில் புரமோசனை பெறுவார்கள், நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்படலாம், இதனால செலவுகள் அதிகரிக்கலாம். புதிய வேலைகளைத் தொடங்க மே மாதம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


மேலும் படிக்க | Maha Shivratri Puja: அபிஷேகம் எப்படி எத்தனை நேரம் செய்யலாம்? எந்த திருமஞ்சனத்தால் கடவுளின் மனம் குளிரும்?


சிம்மம் (Leo Zodiac Sign) :
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுப யோகம் உண்டாகும். மேலும் மே மாதம் முதல் பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவால் நீங்கள் மிகவும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தொழிலை விரிவுப் படுத்த வெளிநாட்டிற்கு செல்லலாம். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.


கன்னி (Virgo Zodiac Sign) :
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே வரவிருக்கும் குரு பெயர்ச்சியால் லாபகரமான பலனைப் பெறுவீர்கள். நிறைய நன்மைகள் நடைபெறும். பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கலாம். தொழிலில் பதவி உயர்வை பெறலாம். பல முக்கியமான பொறுப்புகளை பெறலாம். பணி தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியை பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Vijaya Ekadashi: விஜய ஏகாதசி 2024... மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற... செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ