1 ஆண்டுக்கு பிறகு உருவாகும் அபூர்வ ராஜயோகம், இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை
ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும்.
Lakshmi Narayan Rajyogam : ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். இதுவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் நுழையும் போது சிறப்பான ராஜயோகம் உருவாகும். இதனிடையே மகிழ்ச்சி, செல்வம் போன்றவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் இன்று கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்த ராசியில் ஏற்கனவே கிரகங்களின் அதிபதியான புதன் பயணித்து வருகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஒரு வருடத்திற்கு சுக்கிரனும், புதனும் சேர்க்கை தந்துள்ளனர். இதனால் லக்ஷ்மி நாராயணன் யோகம் உருவாகியுள்ளது. இந்த சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு மங்களகரமான ராஜயோகம் அளவில்லை இன்பத்தையும், நல்ல நாட்களையும் தரும். எனவே இந்த ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): சுக்கிரன் புதன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு வரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை இப்போது திரும்பப் பெறலாம். தொழில் முன்னேற்றம் அடையும், இதனால் பண வரவும் உண்டாகும். உங்களின் தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணத்தை மேற்கோள்வீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கலாம். பண ஆதாயம் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் தரும். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் புதிய காதல் மலரும்.
கடகம் (Cancer Zodiac Sign): புதன் சுக்கிரன் (Budhan - Sukran) சேர்க்கையால் உருவாக்கி இருக்கும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். லட்சுமி தேவியின் அருளால் எதிர்பாராத பண ஆதாயத்தை தரும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம் இது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மகரம் (Capricorn Zodiac Sign): சுக்கிரன் புதன் சேர்க்கை மற்றும் லக்ஷ்மி நாராயணர் (Lakshmi Narayan Rajyogam) யோகத்தால் சுப பலன் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவையில் இருந்த வேலைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரலாம். திருமணம் நடைபெறலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். இதனால் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த பணம் திரும்ப கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி, மரியாதை கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ