கும்ப ராசியில் புதன் அஸ்தமனம் 2023: ஜோதிடத்தில், புதன் கிரகம் செல்வம்-வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே, புதன் பெயர்ச்சி, புதன் அஸ்தமனம் அல்லது புதன் உயர்வு மக்களின் தொழில், வியாபாரம், பொருளாதார நிலை, பேச்சு போன்றவற்றை பாதிக்கிறது. ஜோதிடத்தில் கிரகங்களின் அஸ்தமனம் நல்லதாகக் கருதப்படவதில்லை. அந்தவகையில் வருகிற 28 பிப்ரவரி 2023 அன்று காலை 8 மணிக்கு புதன் அஸ்தமனமாவார். மீண்டும் மார்ச் 31, 2023 அன்று உதயமாகுவார். இதனால் 4 ராசிகள் மிகவும் சுபமாக இருக்கும். எனவே அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி: புதன் அஸ்தமனம் மேஷ ராசிக்காரர்களின் தொழிலில் சுப பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழல் இருக்கும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். பிரச்சனைகள் நீங்கும். கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்! இன்று இந்த ராசிகளுக்கு தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்


கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணம் செல்லலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த காலம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.


துலாம் ராசி- துலாம் ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் மனம் ஆன்மீகத்தில் ஈடுபடும். வியாபாரத்தில் நல்ல லாபம் அடைவதோடு, முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் சம்பந்தமான வேலை அல்லது வியாபாரம் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலை மேம்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கடின உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். வியாபாரம் வேகமாக வளரும். பொருளாதார ஆதாயம் உண்டாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மேஷத்தில் இணையும் சுக்ரன் -ராகு! பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ