சுக்கிரன் ராகு இணைவு பலன்கள்: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நிழல் கிரகமான ராகு உடன் சுக்கிரன் இணைவதால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பம் ஏற்படும். மார்ச் 12 ஆம் தேதி, சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 6, 2023 வரை இவை இணைந்திருபார்கள். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
சுக்கிரன் ராகு சேர்க்கை மேஷ ராசியில் தான் நடக்கப் போகிறது. இந்த கூட்டணி மேஷ ராசியின் லக்னத்தில் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை உங்கள் உறவுகளை பாதிக்கலாம். இதுமட்டுமின்றி, மிகுந்த எச்சரிக்கை உடன் பிறரிடம் நெருங்கி வாருங்கள். இந்த நேரத்தில், உங்களுக்குப் பொருத்தமில்லாத ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம். அதே சமயம் காதல் விஷயத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்க பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ராகு மற்றும் சுக்கிரன் இணைவதால் ரிஷபம் ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பழைய உறவுகள் உங்கள் கவலையை அதிகரிக்கும். அதே சமயம் காதல் வாழ்க்கையில் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் தேவை. மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளால் வருத்தப்படாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள். முக்கிய முடிவுகளை முகிந்த ஆலோசனைக்கு பிறகு எடுக்கவும்.
மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!
மீனம்
சுக்கிரன், ராகு சேர்க்கையால் மீன ராசிக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். இந்த நேரத்தில், திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் இப்போது தீராது. ஆனால் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப ஆதரவு கிடைக்காது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மனக்கசப்பை ஏற்படுத்தும். வீட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.
கன்னி
ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உங்கள் பேச்சு கடுமையாக இருக்கலாம். உங்கள் நடத்தையால் பிறர் பாதிக்கப்படலாம். அதனால்தான் இந்த நேரத்தில் மிகவும் யோசித்து நடக்கவும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணைக்கு முன்னுரிமை கொடுப்பது உறவுக்கு இனிமை சேர்க்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ