லட்சுமி அன்னையின் அருள் நிறைந்த ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ராசிக்காரர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் சில பலங்களும் சில குறைபாடுகளும் உள்ளன. தனிப்பட்ட குணாதிசயங்களை தவிர, சிலருக்கு அதிர்ஷ்டம் காரணமாகவும், விரைவாக வெற்றி கிடைக்கும். எனினும், சிலருக்கு கடினமாக உழைத்த பிறகுதான் வெற்றி கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவர் லக்ஷ்மி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டால், அவருடைய வாழ்க்கையில் செல்வம் செழிக்கும், எப்போதும் பணத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பார்கள். குறிப்பாக, ஒரு வீட்டில் உள்ள பெண்களுக்கு லட்சுமி அன்னையின் அருள் இருந்தால், அந்த வீடே சுபிட்சமாக இருக்கும். தாய், மனைவி, மகள் என யாருக்கு அன்னை லட்சுமியின் அருள் இருந்தாலும், அந்த வீடு நல்ல நிலைக்கு வந்துவிடும். குறிப்பாக, சில ராசிப் பெண்களுக்கு பிறந்தது முதலே அன்னை லட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த ராசி பெண்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்


ரிஷபம்: 


ரிஷப ராசி பெண்களிடம் பணம் அதிகம் இருக்கும். அவர்கள் பணத்தை மிகவும் யோசித்து செலவழிப்பது மட்டுமல்லாமல், பணத்தை மிகவும் கச்சிதமாக செலவு செய்வார்கள். இந்தப் பெண்கள் சம்பாதிப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் வல்லவர்கள். இவர்களுக்கு நிதி மேலாண்மை தொடர்பான நல்ல புரிதல் இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால், கண்டிப்பாக வெற்றியடைவார்கள். அலுவலகப் பணிகளில் இருக்கும் ரிஷப ராசிப்பெண்கள் கண்டிப்பாக, தங்கள் புத்திசாலித்தனத்தால், எளிதாக உயர் பதவிகளை பெற்று ஊதிய உயர்வுகளையும் அடிக்கடி பெறுவார்கள். இந்த ராசி பெண்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, எந்த ராசிக்கு கஷ்ட காலம் 


துலாம்: 


அன்னை லக்ஷ்மி குறிப்பாக துலாம் ராசி பெண்களிடம் அன்பாக இருப்பதோடு, இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். இந்த பெண்கள் வசிக்கும் வீட்டில், அளவற்ற மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் இருக்கும். கடினமாக உழைத்து நிறைய செல்வம் சம்பாதித்து ராணி போல் வாழ்வதில் இந்த பெண்கள் பின் தங்குவதில்லை. அவர்களுக்கு பெரும் புகழும் கிடைக்கிறது.


மகரம்: 


ஜோதிட சாஸ்திரத்தின் படி மகர ராசி பெண்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்களுக்கும் லட்சுமி தேவியின் அருளால் நிறைய செல்வமும் செழிப்பும் கிடைக்கிறது. சனிபகவானின் செல்வாக்கு காரணமாக, அவர்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். தாங்கள் நினைத்ததை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னரே இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். மகர ராசி பெண்கள் தங்கள் தொழிலில் உயர் பதவிகளை அடைகிறார்கள், அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். சிறு சேமிப்பு மூலம் பெரிய வங்கி இருப்பு வைப்பது இவர்களின் சிறப்பம்சமாகும்
 
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் வாழ்க்கை தித்திக்கும், செல்வம் கொழிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ