கணவனையும் புகுந்த வீட்டையும் தன் கையில் வைத்திருக்கும் பெண்களின் ராசிகள் இவைதான்

Personality by Zodiac Sign: பிறப்பிலிருந்தே அச்சமற்ற மற்றும் ஆதிக்கம் செலுத்தும் குணமுடைய பெண்களின் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2022, 05:55 PM IST
  • மகர ராசிப் பெண்கள் பயமற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள்.
  • அவர்கள் தங்கள் இயல்பு காரணமாக, யாரையும் தங்கள் பேச்சுக்கு எதிராக பேச விடுவதில்லை.
  • அவர்கள் கெட்ட விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
கணவனையும் புகுந்த வீட்டையும் தன் கையில் வைத்திருக்கும் பெண்களின் ராசிகள் இவைதான் title=

சிங்கப்பெண்களின் ராசிகள்: மனிதர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறார்கள். அனைவருக்கும் தங்கள் திருமண வாழ்க்கை, தொழில் மற்றும் நிதி நிலை பற்றியும் தெரிந்து கொள்ள ஆசையும் ஆவலும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ராசியிலிருந்து ஒருவரது இயல்பு, ஆளுமை, எதிர்காலம் ஆகியவற்றை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? திருமணம் போன்றவற்றிற்கு பிறகு குடும்ப உறவு எப்படி இருக்கும்? என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் எப்போதும் இருக்கும். 

குறிப்பாக, வீட்டின் பெண்கள் அறிவாளிகளாகவும், தைரியமானவர்களாகவும் இருப்பது மிக முக்கியமாகும். பிறப்பிலிருந்தே அச்சமற்ற மற்றும் ஆதிக்கம் செலுத்தும் குணமுடைய பெண்களின் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் மாமியார் வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். 

மகரம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரின் இயல்பும், விருப்பு வெறுப்பும் வேறுபடும். மகர ராசிப் பெண்கள் பயமற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் இயல்பு காரணமாக, யாரையும் தங்கள் பேச்சுக்கு எதிராக பேச விடுவதில்லை. அவர்கள் கெட்ட விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், இந்தப் பொண்ணுங்களுக்கு யாருக்கும் அடங்கி இருக்க பிடிக்காது. இதனாலேயே, திருமணத்திற்குப் பிறகும், அதே குணம் கொண்ட அவர்கள், தங்கள் கணவனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் குடும்பத்தை பராமரிப்பதில் முன்னணியில் இருப்பார்கள். 

மேலும் படிக்க | சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் வாழ்க்கை தித்திக்கும், செல்வம் கொழிக்கும்

சிம்மம்:

இந்த பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள், யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். கணவன் மற்றும் மாமியாரை வீட்டாரை முழுமையாக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள், குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வர விடமாட்டார்கள். தங்களது ஆதிக்க குணத்தால் கணவனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். மேலும் அவர்களுக்கு முன்னால் யாருடைய கருத்தும் எடுபடாது. 

விருச்சிகம்:

ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசி பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். முதல் பார்வையிலேயே இவர்கள் அனைவரையும் மயக்கி விடுகிறார்கள். விருச்சிக ராசி பெண்ணின் கணவரும் மனைவியிடன் மயங்கிதான் இருப்பார். இந்த ராசி பெண்கள் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, கணவன் மற்றும் குடும்பத்தினரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் நன்றாக புரிந்துகொள்கிறார்கள். கணவனோ மற்றவர்களோ தவறு செய்தால் அதை எளிதில் இந்த பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். 

மேஷம்:

இந்த Personality by Zodiac Signபெண்கள் அன்பால் மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள். தங்கள் இனிமையான பேச்சால் இவர்கள் கணவன் வீட்டாரையும் தன்வசப்படுத்தி விடுவார்கள். தங்களது காதலால் கணவனையும் கட்டுப்படுத்தி அனைத்து வேலைகளையும் சாத்தித்துக் கொள்வார்கள். அவர்கள் முன், கணவனும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இவர்களது இயல்பு அப்படி. இந்த பெண்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புகிறார்கள். குடும்பத்தை ஒன்றாக வைத்து, குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது இவர்களது தனிச்சிறப்பாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்டோபர் 16 வரை செவ்வாய் பெயர்ச்சியின் பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News