Lucky Zodiac Signs of November: ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களில் மாற்றம் ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும் சிலருக்கு தீய பலன்களும் கிடைக்கின்றன. இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் மாதத்தில் சனி மற்றும் சுக்கிரனின் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், உலக இன்பம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் 3 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். 4 நவம்பர் ஆம் தேதி 2023 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைய  உள்ளார். சுக்கிரனின் பெயர்ச்சி மற்றும் சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இதனால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி (Aries):


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். பெண்கள் சமையலறையில் வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் வெற்றியின் உச்சம் தொடுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நடிப்புத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பெரிய சலுகை கிடைக்கலாம். அனைத்து வகையான வியாபாரத்திலும் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிட்டும். 


மிதுன ராசி (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிக நன்றாக இருக்கும். சில வேலைகளில் அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் புகழ் உயரும். சமூக அமைப்புகளில் சேர இது நல்ல நேரமாக இருக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் செய்யத் தேர்ந்தெடுக்கும் காரியங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தரும். குடும்பத்தினர் அனைவர் மத்தியிலும் அன்பு அதிகரிக்கும். உறவில் இனிமை இருக்கும்.


மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி: இன்னும் 5 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்


சிம்ம ராசி (Libra)


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு நிதி நன்மைகளைத் தரும். முந்தைய முயற்சிகள் பலன் தரும். உங்கள் பங்கு தலைமைத்துவமாகவும் இருக்கலாம். பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். பழைய கவலைகளை மறந்து முன்னேறுங்கள். உங்கள் மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகளில் இனிமை ஏற்படும். தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வேலை வாய்ப்புகள் அமையும்.


கன்னி ராசி (Virgo)


கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் முக்கியமானதாக இருக்கும். நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்குகள் தீரும். பெரிய வழக்கறிஞரின் உதவியையும் பெறலாம். திருமணமாகாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் மகளுக்கு பொருத்தமான வரன் கிடைக்கலாம். உங்கள் கவர்ச்சியான தன்மை மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும். நீங்கள் புதிதாக நிலம் வாங்க நினைத்தால், அதற்கு இந்த மாதம் நல்ல நேரமாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இந்த காலத்தில் அதிக முன்னேற்றம் அடைவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உச்சம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ