சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. நவம்பரில் பணம், புகழ், பதவி!!

Sukran Peyarchi: சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிக நல்ல பலன்களை அள்ளித்தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 25, 2023, 03:03 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இவர்கள் வாழ்க்கையில் அதிக முன்னேற்றத்தை அடைவார்கள்.
  • இந்த நேரம் இவர்களுக்கு குறிப்பாக நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. நவம்பரில் பணம், புகழ், பதவி!!

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, நவம்பர் தொடக்கத்தில் சுக்கிரம் தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். சுக்கிரன் உலக இன்பம், செல்வம், பணம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக இருக்கிறர். ஒரு நபரின் வாழ்வில் சுக்கிரன் சுபமான இடத்தில் இருந்தால், அவருக்கு செல்வச் செழிப்பு, மகிழ்ச்சி, அன்பு, செல்வம் ஆகியவற்றுக்கு பஞ்சம் இருக்காது. தீபாவளிக்கு முன்னதாகவே சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிக நல்ல பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

சுக்கிரன் பெயர்ச்சியால் பேரும் புகழும் பெறவுள்ள ராசிகள்

ரிஷப ராசி (Taurus)

சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

கடக ராசி (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் அதிக முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த நேரம் இவர்களுக்கு குறிப்பாக நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சில முக்கிய பொருட்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆசை இப்போது நிறைவேறும். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். 

சிம்ம ராசி (Leo)

சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இந்த ராஜயோகம் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த காலகட்டத்தில் பல வருமான ஆதாரங்கள் உருவாகும். செல்வ வளம் பெருகும். காதல் வாழ்க்கை மேம்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.

மேலும் படிக்க | நவம்பரில் சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

மகர ராசி (Capricorn)

கன்னி ராசியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் மகர ராசிக்கு மங்களகரமானதாகவும், பலன் தருவதாகவும் இருக்கும். இந்தக் காலத்தில் சுக்கிரனின் அருளால் வாழ்வில் செல்வச் செழிப்புக்கு பஞ்சம் இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். பணியிடத்தில் பணியில் கவனம் செலுத்துவீர்கள். இந்த காலகட்டத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். தினசரி வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைக்கும். செல்வம் பெருக வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் மகர ராசியினருக்கு சாதகமாக அமையும்.

தனுசு ராசி (Sagittarius)

கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கும் மங்களகரமானதாகவும், நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. சுக்கிர பகவானின் அருளால் இக்காலகட்டத்தில் செல்வம் பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற பலன்களைப் பெறலாம். வியாபாரத்தில் புதிய வருமானங்கள் உருவாகும். கட்டிடம், வாகன வசதி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நிலம் தொடர்பான வேலைகளால் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், இந்த சுக்கிரனின் பெயர்ச்சி பல வழிகளில் நன்மை தரும். நீச்சபங்க ராஜயோகம் நல்ல அதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | குரு உச்சத்தால் அபூர்வ ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News