அக்டோபரில் பெரிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு நல்ல பொற்காலம் ஆரம்பம்
October 2023, Monthly Horoscope: கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும், எனினும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும்.
October 2023, Monthly Horoscope: அக்டோபர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகின்றது. ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்கள் தங்கள் ராசிகளையும், இயக்கங்களையும், நிலைகளையும் மாற்றுகின்றன. ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றம், உதய அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
அக்டோபர் மாத ராசிபலன்:
கிரகங்களின் மாற்றம் காரணமாக பல சமயம் ஒரே ராசியில் பல கிரகங்களில் சேர்க்கையும் உருவாகும். அப்படிப்பட்ட தருணங்களில் ராஜயோகங்கள் உருவாகின்றன. இவை சுப யோகங்களாக கருதப்படுகின்றன. இந்த ராஜயோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செப்டம்பர் மாதத்தை போலவே அக்டோபரிலும் 6 பெரிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகவுள்ளன. அதன் தாக்கம் ராசிக்காரர்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
6 கிரகங்கள் ஒரே நேரத்தில் தங்கள் இயக்கத்தை மாற்றும்
ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபரில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி ஏற்படவுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்டோபர் தொடக்கத்தில் மூன்று கிரகங்கள் பெயர்ச்சி அடையும். மாத இறுதியில் அதாவது அக்டோபர் 30 ஆம் தேதி ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றுவார்கள். ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பெயர்ச்சி ஆவார்கள். இந்த கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும், எனினும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அக்டோபரில் பெரிய கிரகங்களின் மாற்றங்கள்
புதன் பெயர்ச்சி 2023:
புத்திசாலித்தனத்தின் காரணியான புதன், கன்னி ராசிக்கு அக்டோபர் 1, 2023 அன்று இரவு 08.45 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 67 நாட்கள் ஆகும். கன்னி, விருச்சிகம், மிதுனம், மகரம், மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் இதனால் பலன் பெறுவார்கள். மரியாதை அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் புதாதித்ய ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகமும் உருவாகும்.
சுக்கிரன் பெயர்ச்சி 2023:
சுக்கிரன் 2 அக்டோபர் 2023 அன்று சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார். அழகு மற்றும் செல்வத்திற்கு காரணமான கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறார். சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். எதிர்பாராத பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் வெற்றியும் மரியாதையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன் 2024: அடுத்த ஆண்டு இந்த ராசிகளுக்கு பொற்காலம், குபேர யோகம்
செவ்வாய்ப் பெயர்ச்சி 2023:
செவ்வாய் 3 அக்டோபர் 2023 அன்று மாலை 06.16 மணிக்கு துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. செவ்வாய் ராசியை மாற்றுவது மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.
சூரியன் பெயர்ச்சி 2023:
கிரகங்களின் அரசனான சூரியன் 18 அக்டோபர் 2023 அன்று அதிகாலை 01.42 மணிக்கு துலாம் ராசிக்கு செல்கிறார். செவ்வாய் கிரகம் ஏற்கனவே அங்கு இருக்கும். செவ்வாய்-சூரியன் சேர்க்கை சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் நல்ல ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். பணத்துடன் மரியாதையையும் பெறுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி 2023:
அக்டோபர் 30 ஆம் தேதி ராகுவும் மேஷ ராசியில் இருந்து விலகி மீனத்தில் நுழைகிறார், கேது கன்னி ராசியில் நுழைகிறார். ராகு மற்றும் கேதுவை நிழல் கிரகங்கள் என்றும் அழைப்பார்கள். ராகுவும் கேதுவும் எப்பொழுதும் வக்ர இயக்கத்தில் இயங்கும் கிரகங்கள் ஆகும். மீனத்தில் ராகு நுழைவதால் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் குறையும். சிம்மம், தனுசு, ரிஷபம் ஆகிய ராசிகளுக்கு கேதுவின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் மாதம் அமர்க்களமாய் இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ