பிப்ரவரி மாத ராசிபலன்: இந்த மாதம் இவர்களுக்கு பணக்கார யோகம், பண மழையில் நனைவார்கள்
Monthly Horoscope: இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வானைத் தொடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிப்ரவரி மாத ராசிபலன்: வரும் புதன் கிழமை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் நிகழவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வானைத் தொடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த மாதம் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் சரியான நிதி நிர்வாகத்தை செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இப்போது உங்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும்.
பிப்ரவரியில், மேஷ ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கவுள்ளது. சூரியன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமான நிலையில் இருப்பார்கள். அதன் தாக்கத்தால், உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், பிப்ரவரி 15க்கு பிறகு உங்களுக்கு இதற்கான சாதகமான நேரம் தொடங்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் வலுவாக இருக்கும். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம் என்றாலும், அனைத்தும் சுப செலவுகளாக இருக்கும். விரைவில் அனைத்து செலவுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் வருவாயும் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணம் ஈட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அதிகமான பண வரவு இருக்கும். மேலும் நீங்கள் பணத்தை சேமிக்கவும் முடியும். நீங்கள் சொந்தமாக வியாபாரம் செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், பிப்ரவரி 15, 2023க்குப் பிறகு அதை செய்யலாம். அப்படி செய்தால், நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
மேலும் படிக்க | ராகு பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்! கையில் பணம் புரளும் 3 ராசிக்காரர்கள்
விருச்சிகம்:
நிதி ரீதியாகப் பார்த்தால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சில முக்கியமான விஷயங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். சரியான பட்ஜெட்டை உருவாக்கி, புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்க வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் குறையும். சந்திரன் ராசியில் வியாழனின் சுப அம்சம் காரணமாக, உங்கள் நிதி நிலைமை முன்பை விட மேம்படும். இந்த மாதம் சுப காரியங்களுக்கு பணத்தை நன்கொடையாக கொடுக்கலாம்.
தனுசு:
நிதி ரீதியாக, பிப்ரவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதம் பதினொன்றாம் வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆன்மீகப் பணிகளுக்காகவும் கொடுக்கலாம்.
பங்குச் சந்தையுடன் தொடர்புடைய தனுசு ராசிக்காரர்கள், இந்த மாதம் திடீரென்று நல்ல லாபத்தைப் பெறலாம். இந்த மாதம் வாகனம் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் லாபம் ஈட்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அலர்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ