ராகு பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்! கையில் பணம் புரளும் 3 ராசிக்காரர்கள்

Ketu Transit 2023 Effects: நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்து வாழ்க்கையில் மகத்தான பிரபலத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சியின் முழு பலன்களும் யாருக்கு?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 30, 2023, 07:23 AM IST
  • இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி
  • நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் பிரபல யோகம்
  • ராகுவின் அருள் பெறும் ராசிகள்
ராகு பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்! கையில் பணம் புரளும் 3 ராசிக்காரர்கள்

ராகு பெயர்ச்சி 2023:  ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சில வேகமாக இயங்கினால், சில மந்த கதியில் நகர்கின்றன, சில மத்திம கதியில் நகர்கின்றன. ஆனால், வழக்கமாக  கிரகங்களின் இயக்கம் ஒரு ராசியை சென்று அடையும்போது அது பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களில், மனிதர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுகிறது. அந்த மாற்றங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.

ஜோதிடத்தில் ராகு-கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் வக்ர நிலையிலேயே, அதாவது எதிர் திசையிலேயே நகர்கின்றன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற தலா ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் ராகு கேது கிரகங்கள், பலருக்கு நன்மையை அள்ளிக் கொடுக்கின்றன என்றால், சிலருக்கு சங்கடங்களைக் கொடுக்கின்றன.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: குபேர லாபம் பெற போகும் 3 ராசிகள்!

ஜோதிடத்தின்படி, ராகு கிரகம் பிப்ரவரி 9, 2023 அன்று நட்சத்திரத்தை மாற்றி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கிறது. தற்போது ராகு பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், ராகுவின் இந்த மாற்றம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ராகுவின் நட்சத்திர மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் செல்வத்தையும் தரப்போகிறது.

மிதுனம்: ராகுவின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அரசியலில் ஈடுபடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். நிர்வாகத்தில் இருப்பவர்களும் நன்மைகளைப் பெறுவார்கள். முதலீடுகளாலும் வருவாய் கிட்டும். 

மேலும் படிக்க | Sani Asth: சூரியனை நெருங்கும் சனி அஸ்தமாவதால் பாதிக்கப்படும் 4 ராசிகள்! எச்சரிக்கை அவசியம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வேலை மாற்றம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. சமூகத்தில் பிரபலமானவர்களுடன் தொடர்பு ஏற்படும், அது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

கன்னி: ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் பெரிதும் நன்மைகளை அடையப்போவது கன்னி ராசிக்காரர்களாக இருப்பார்கள். நிலம் மற்றும் கட்டிடம் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் யோகத்தையும் கொடுப்பார் ராகுக். காதல், திருமணம், உறவுகள் என அனைவரிடமும் சுமூகமான உறவை மேம்படுத்தும் காலம் இது. வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வியாபாரம் பெருக தேவையான உதவிகள் கிடைக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 25 நாட்களில் ‘3’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News