ஜோதிட சாஸ்திரத்தில் கோள்களின் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றின் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணலாம். தேவகுரு பிருஹஸ்பதியைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் தனது ராசியை மாற்ற ஒரு வருடம் ஆகும். அதாவது, ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற ஒரு வருட காலம் ஆகும். அவர் 24 நவம்பர் 2022 வக்ர பெயர்ச்சி ஆன நிலையில்,  ஏப்ரல் 21, 2023 அன்று இரவு 8.43 வரை வக்ர நிவர்த்தி அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்களுக்கு அவரது அபரிமிதமான பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


குருவின் இந்த வக்ர நிவர்த்தி அடையும் நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் வெற்றிகள் கிடைக்கும். முன்னேற்ற வாய்ப்புகளும் ஏற்படும். இதன் போது நிறைய பண ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும்


ரிஷபம்


குரு வக்ர நிவர்த்தி அடைவதினால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது எனலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் தங்கள் வேலையை விரிவுபடுத்தலாம். ஏப்ரல் 21 வரை எல்லா இடங்களிலிருந்தும் சுப பலன்கள் கிடைக்கும். நீண்ட பயணமும் செல்லலாம்.


மேலும் படிக்க | February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ


கடகம்


குரு மார்க்கமாக இருப்பது கடக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இதன் காரணமாக ஆற்றலுடன் செயல்படுவோம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமாகாத ஆண், பெண் திருமணம் செய்து கொள்ளலாம்.


விருச்சிகம்


குருவின் வழியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். எந்தவொரு புதிய வேலைக்கும் இந்த நேரம் சாதகமானது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். நிறைய பண ஆதாயம் இருக்கும், அதன் காரணமாக பொருளாதார பக்கம் வலுவடையும்.


மீனம்


மீன ராசிக்கு அதிபதியான குரு தன் சொந்த ராசியில் வக்ர நிலையில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ