பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

February Money Horoscope 2023: புதிய மாதம் புதிய நம்பிக்கைகளுடன் தொடங்குகிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தின் நிலை அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2023, 09:27 PM IST
  • பணவரவில் தடைகள் ஏற்படும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும்.
  • மாத தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • பொருளாதார நிலை மேம்படும், பண ஆதாயம் கிடைக்கும்.
பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

பிப்ரவரி ராசிபலன் 2023: ஒவ்வொரு மாதமும், சில அல்லது மற்ற கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணலாம். பிப்ரவரி தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் வரவிருக்கும் மாதம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கட்டும் என எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், வரவிருக்கும் மாதம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வசதிகளையும் கொண்டு வரும் என நம்புகிறார்கள். ஆனால் பிப்ரவரி மாதம் மிகவும் பண விரயத்தையும் செலவையும், பன இழப்பையும் தரும் மாதமாக சில ராசிகளுக்கு இருக்கும். அத்தகைய ராசிக்காரர்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம். இவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ஜோதிடத்தின் படி, பிப்ரவரியில், கிரகங்களின் இயக்கத்தின் பாதகமான பலன்களை ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். இந்த நேரத்தில் வருமானம் வருவதில் பல தடைகள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. இருப்பினும், பிப்ரவரி மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும் மற்றும் உங்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் பணத்தையும் சேமிக்க முடியும். நீங்கள் சொந்தமாக வியாபாரம் செய்தாலோ அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தாலோ பிப்ரவரி 15க்குப் பிறகான நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | மேஷத்திற்கு செல்லும் குரு! பங்குனியில் வெற்றிகளை குவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

மிதுனம்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இல்லை. வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், திட்டமிடல் மிகவும் புத்திசாலித்தனமாக செய்யப்பட வேண்டும். பிப்ரவரி 15க்குப் பிறகு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அனுகூலமான நிலையில் இருந்து சிறிது பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் பொருளாதார நிலை மேம்படும், பண ஆதாயம் கிடைக்கும். ஆனால் மாத தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய நேரம் இது. பணவரவில் தடைகள் ஏற்படும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், பணத்தை சேமிப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஏழாம் வீட்டில் சனியுடன் இருப்பார். இந்த காரணத்திற்காக, இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.

துலாம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, துலாம் ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இது மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் லாபம் கிடைக்கும். அதே சமயம் திடீர் பண ஆதாயமும் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசிபலன்: இந்த மாதம் இவர்களுக்கு பணக்கார யோகம், பண மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News